சர்க்கரை வியாதி எப்போது வரும் தெரியுமா? தவிர்க்க காலையில் இதை குடிங்க; டாக்டர் சிவராமன்
காலையில் சாப்பிடக்கூடிய கஷாயம் பித்தத்தை குறைப்பதாக இருந்தால் அது சிறப்பு. கரிசலாங்கன்னி, மொசுமொசக்கை, திரிகடுகம், ஆவாரம்பூ கசாயம், நெல்லிக்காய் குடிநீர் இந்த வகையான கஷாயங்களை காலையில் குடித்து வந்தால் பித்தம் குறையும் என்கிறார் மருத்துவர் சிவராமன்.

காலைநேரங்களில் பொதுவாக எல்லோருக்கும் பித்தம் அதிகமாக இருக்கும். எனவே பித்தத்தை குறைக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் நாம் அதற்கு நேர்மாறாக பித்தத்தை அதிகரிக்கும் காபியை காலைநேரங்களில் அதிகம் எடுத்துக்கொள்கிறோம். விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் பேன்றவற்றை சாப்பிடலமா சாப்பிட்டால் ஜீரணமாகுமா நெஞ்சு கறிக்குமா எதுக்களித்துக்கெண்டே இருக்குமா இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம்.
Advertisment
காலையில் சாப்பிடக்கூடிய கஷாயம் பித்தத்தை குறைப்பதாக இருந்தால் அது சிறப்பு. கரிசலாங்கன்னி, மொசுமொசக்கை, திரிகடுகம், ஆவாரம்பூ கசாயம், நெல்லிக்காய் குடிநீர் இந்த வகையான கஷாயங்களை காலையில் குடித்து வந்தால் பித்தம் குறையும் என்கிறார் மருத்துவர் சிவராமன்.
ஆவாரை கஷாயம் மிகவும் நம் உடலுக்கு முக்கியமானது. அவாரம்பூ குடிநீர் உடலுக்கு குளிர்ச்சியூட்டுகிறது. பித்தம் அதிகரிப்பதனால் வரக்கூடிய முதல் நோய் சர்க்கரை நோய். பித்தம் அதிகரித்து இருக்கும் போது கபம் அதிகரிப்பதால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் அதிகம். ஆவாரம்பூ தேநீர் குடித்து வருபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்கிறார் மருத்துவர் சிவராமன்.
காலையில் எழுந்தவுடன்காபி தவிர்த்து, வெறும் நீர் அல்லது குளிர்ச்சி தரும் கசாயம் குடிக்கவும். தினசரி உணவில் பசலைக் கீரை, முருங்கைக்கீரை போன்ற குளிர்ச்சியான கீரைகளை சேர்க்கவும். உப்பு மற்றும் கார உணவுகளை கட்டுப்படுத்தவும். போதிய தூக்கம், மன அமைதி ஆகியவை பித்தத்தை கட்டுப்படுத்த முக்கியமாக தேவை. பித்தம் என்பது நம் உடலில் ஏற்படும் இயற்கை மாற்றங்களுள் ஒன்று. ஆனால் அதை மருத்துவமில்லாமல் வீட்டிலேயே சுலபமாக சமநிலையில் வைத்திருக்க முடியும். நம் உணவுப் பழக்கங்களை மாற்றுவது தான் முதன்மையான தீர்வு!
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.