சில நேரங்களில் சாப்பிட்ட பிறகும், நமக்கு பசி எடுக்கும். இந்நிலையில் இதை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.
நாம் சாப்பிட்டும் உணவில் 1/3 அளவு புரத சத்து இருக்க வேண்டும். குறிப்பாக இவை பருப்பு வகைகள், பன்னீர், டோஃபூ உள்ளிட்ட உணவில் உள்ளது.
நாம் சாப்பிடும்போது வேறு விஷயங்களை செய்தால், நனக்கு அந்த விஷயம் புரியாது. இந்நிலையில் இப்படி சாப்பிடுவதால், அதிகம் பசிப்பதாக நமக்கு தோன்று . அடிக்கடி சாப்பிட வாய்ப்புள்ளது. சாப்பிடும்போது டிவி பார்ப்பது, புத்தகம் படிப்பது, செல்போனை பார்ப்பதை நாம் நிறுத்திகொள்ள வேண்டும்.
இந்நிலையில் நாம் சாப்பிட்டு முடித்த பிறகு உடனடியாக பசித்தால் 22 நிமிடங்களை வரை காத்திருக்கவும். இந்நிலையில் இதுபோல சாப்பிட்ட பிறகு இனிப்பை நாம் எடுத்துகொண்டால், சாப்பிட்ட பின்பு அதிகம் பசிக்காது.
இதுபோல, நாம் சாப்பிடும்போது தயிரை எடுத்துகொண்டாலும் அதிகம் பசிக்காது. சீயா விதைகள் சேர்த்த பானத்தை நாம் எடுத்துகொள்ளலாம். சாப்பிட்ட பிறகு அதிகம் பசித்தால், சாப்பிட்ட 30 நிமிடங்களுக்கு பிறகு, தண்ணீரில் சியா விதைகள் 2 டேபிள் ஸ்பூனை சேர்க்கவும். தொடர்ந்து 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். இதை நாம் மெதுவாக குடித்தால் நமது பசியை கட்டுப்படுத்தும். இந்நிலையில் இதை நாம் நள்ளிரவில் வேலை பார்க்க வேண்டும் என்று நினைத்தால், சீக்கிரம் சாப்பிட்ட பிறகு இதை குடிக்கலாம்.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“