நமது சருமத்தை கவனத்திக்கொள்ள, நாம் ரெட்டிநாய்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி உள்ள அழகு சாதன பொருட்களை நாம் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் எல்லா வயதினரும் இதை பயன்படுத்தலாமா ? குறிப்பாக 20 வயதில் இருப்பவர்கள் இதை பயன்படுத்தலாமா என்ற கேள்வி எழும். இந்நிலையில் வைட்டமின் சி சத்தில் ஆண்டி ஆக்ஸிடண்ட் தன்மை உள்ளது. இது நமது சருமத்தை கூடுதல் பொலிவாக மாற்ற உதவும். நாம் அதிகம் வெயில்பட்டு கருத்துபோகாமல் இருக்க உதவுகிறது. கொலஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது.
இந்நிலையில் வைட்டமின் சி சிரத்தை நாம் ஒட்டுமொத்த சருமத்தின் ஆரோக்கியத்திறாக பயன்படுத்தலாம்
வைட்டமின் ஏ- சத்தில் இருந்து வந்த ரெட்டிநாய்ட்ஸ் வயதாவதை தடுக்கும், சருமம் பழையதன்மையை அடையச் செய்யும். இது முகத்தில் உள்ள வரட்சியான கோடுகளை குறைக்கும். இறந்த செல்களை அகற்றும். கொலஜன் உற்பதியை அதிகரிக்கும். சுருங்கி விரியும் தன்மையை அதிகரிக்க எலாஸ்டின் உற்பத்தியை அதிகரிக்கும்.
இதை பயன்படுத்துவதால், முகப்பருக்கள் ஏற்படுவது குறையும். மேலும் நமது முகத்தில் உள்ள தழும்புகளை வெளிலியில் தெரியாமல் பார்த்துக்கொள்ளும். இதை அதிகமாக பயன்படுத்தினால், ஒவ்வாமை ஏற்படும்.
இந்நிலையில் நாம் நமது 20 வயதில் வைட்டமின் சி மற்றும் ரெட்டினால் பயன்படுத்தினால், அதிக நாட்கள் நமது சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் இருக்கும். சிலருக்கு ரெட்டிநாய்ட்ஸ் தேவைப்படாது. எப்படியானாலும், தோல் மருத்துவரிடம் சென்று இதை பயன்படுத்தலமா என்று கேட்டுக்கொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“