சிறுநீர் சொட்டு சொட்டா வடியுதா? ஆண்களே உஷார்… புரோஸ்டேட் கேன்சரை தடுக்க இதை சாப்பிடுங்க; டாக்டர் யோக வித்யா

உடல் பிரச்னைகளில் மிகவும் முக்கியமானவற்றில் சிறுநீரகக் கோளாறும் ஒன்றாகும். சிறுநீரகப் பிரச்னைகளுக்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

உடல் பிரச்னைகளில் மிகவும் முக்கியமானவற்றில் சிறுநீரகக் கோளாறும் ஒன்றாகும். சிறுநீரகப் பிரச்னைகளுக்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

author-image
WebDesk
New Update
urine-irritation-

சிலருக்கு அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் போல் தோன்றும். ஆனால், கழிவறைக்குப் போனால் சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறும். சிறுநீர் கழித்த பிறகும் தன்னை அறியாமலேயே சொட்டு சொட்டாக சிறுநீரை வெளியேற்றுவார்கள். பொதுவாக, இந்தப் பிரச்னை எந்த வயதிலும் வரலாம். வயதான ஆண்களுக்கு சிறுநீர் குழாயை சுற்றியுள்ள தசைகள் பலம் இழந்து போனாலும் இந்தப் பிரச்னை தலைதூக்கும் என்கிறார் மருத்துவர் யோக வித்யா.

40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு புராஸ்டேட் சுரப்பி பெரிதாகி சிறுநீர்ப்பையின் கழுத்துப் பகுதியை அழுத்துவதால் சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறும் பிரச்னை ஏற்படும். புராஸ்டேட் சுரப்பி வீக்கம் அடைந்தாலோ அல்லது அப்பகுதியில் கட்டிகள் ஏதேனும் இருந்தாலோ இந்தப் பிரச்னை ஏற்படும். இதற்கு  சிறுநீரகவியல் மருத்துவரை கலந்தாலோசித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியமாகும். சிலருக்கு சிறுநீரகப் பையில் கட்டிகளோ, அசாதாரண வளர்ச்சியோ இருந்தால் கூட இந்தப் பிரச்னை தலை தூக்கும்.

தீர்வுகள்:

சிறுநீர் பிரச்னை உள்ளவர்கள் உடல் பருமனாவதை குறைப்பது மிகவும் அவசியம். உடற்பயிற்சிகள் செய்வது நல்லது. அதிக உடல் எடை காரணமாக அல்லது அதிக எடை உள்ள பொருட்களை தூக்குவதாலும் இடுப்பு எலும்பு தசைகள் வலுவிழக்கலாம். இடுப்பு எலும்பு பகுதியில் உள்ள தசைகள் உறுதியாக இல்லையெனில் சிறுநீர் கசிவு பிரச்னை உண்டாகும். மலச்சிக்கல் பிரச்னை காரணமாக மலம் கழிக்கும்போது சிரமப்படுவதால் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பலம் இழந்து சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறலாம். நார்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்னையே சரி செய்யலாம். தினசரி திரவ உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கலாம். நீண்ட காலம் புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படும். புகைப்பிடிப்பதை விட்டுவிடுவது நல்லது.காபி, மது, புகையிலை போன்றவற்றின் காரணமாகவும்  இதுபோன்ற சிறுநீரகப் பிரச்னை ஏற்படலாம். இதற்கு மது, புகையிலை போன்ற பழக்கங்களை கைவிடுவதும் அளவாக காபி அருந்துவதும் சரியான தீர்வாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

General health tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: