Advertisment

காலையில் வெறும் வயிற்றில் ஸ்வீட்... இந்த ஆபத்து இருக்கு: டாக்டர் சுதா சேஷய்யன்

வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடுவது வாயு தொந்தரவு ஏற்படுத்தும் என்கிறார் மருத்துவர் சுதா சேஷய்யன். இதற்கான விளக்கமும் அவர் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
sweet eat

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது உணவுகள் பற்றி டாக்டர் சுதா சேஷய்யன் கூறியுள்ளார். அந்த வீடியோவில், சிட்ரஸ் பழங்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. எலுமிச்சை, ஆரஞ்சு பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம். இதில் உள்ள சிட்ரஸ் ஆசிட் நமது இரைப்பையில் உள்ள ஆசிட்டை ஸ்டிமிடேட் செய்ய வாய்ப்புள்ளது.

Advertisment

அடுத்து ஈஸ்ட் உள்ள உணவுகள். இது காலையில் வெறும் வயிற்றில்  சாப்பிடுவது இரைப்பையில் உள்ள மியூக்கஸ் லைனை தொந்தரவு செய்யும். அதனால் வாயு ஏற்படுகிறது. வயது ஆக ஆக வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடுவது வாயு தொந்தரவு ஏற்படுத்தும். வேறு உணவு எடுத்துக் கொண்டு தயிர் எடுக்கலாம். வெறும் வயிற்றில் தயிர் சாப்பிட வேண்டாம். 

சிலர் காலையில் வெறும் வயிற்றில் இனிப்பு சாப்பிடும் பழக்கம் கொண்டிருப்பர். குறிப்பாக சர்க்கரை சாப்பிடாமல் இருப்பது நல்லது. காரணம்  வெறும் வயிற்றில் ஸ்வீட் சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்கும். இன்சுலின் அளவு அதிகமாகும்.

இன்சுலின் சுரக்க வேண்டிய பான்கிரியாஸ் மேல் லோடு ஏற்படுகிறது. தினமும் ஸ்வீட் சாப்பிட்டு இது போன்ற பான்கிரியாஸ் மேல் லோடு ஏற்படும் போது சில ஆண்டுகளில் பான்கிரியாஸில் உள்ள அணுக்கல் செயல்படாமல் போகும். காலப்போக்கில் இன்சுலின் சுரப்பது குறையும். இது நீரிழிவு நோயை ஏற்படுத்தும். அதனால் வெறும் வயிற்றில் இனிப்பு சாப்பிட வேண்டாம். 

மேலும் சில பழங்கள் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நேரடியாக கேஸ்ட்ரிக் மியூகேஸாவை சொந்தரவு செய்கிறது. பேரிக்காய் இதை செய்யும். இதில் நார்ச்சத்து உள்ளது. ஆனால் அது கடினமாக உள்ளது. அதனால் இது மியூகேஸாவை நேரடியாக சொந்தரவு செய்கிறது. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம் என மருத்துவர் சுதா சேஷய்யன் 
 அறிவுறுத்துகிறார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment