30 வயதிலேயே முகச்சுருக்கங்கள் வருவதாக தற்போது பலரும் கூறுகிறார்கள். மேலும், இளம் வயதிலேயே முகச்சருக்கங்கள் இருப்பதால் தன்னிம்பிக்கை குறைவதாகவும் பலர் கூறுகின்றனர். முகச்சுருக்கத்தை போக்க வேண்டும் என நினைப்பவர்கள் சிலவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் போது தான் முதன்மையாக முகச்சுருக்கங்கள் ஏற்படும். அதன்படி, வைட்டமி டி மற்றும் வைட்டமின் கே ஆகிய இரண்டும் முக்கியம். மேலும், உடல் சூடு தணிந்து குளிர்ச்சியாக இருத்தல் மிக முக்கியம்.
இதற்கு ஆயில் புல்லிங் சிறந்த தீர்வாக இருக்கும். செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய்யை சுமார் 20 நிமிடங்கள் வாயில் வைத்து கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் அனைத்து தசைகளும் தூண்டப்படும்.
இதை தவிர்த்து, ஒரு ஃபேஸ் பேக் மூலம் மூன்று நாள்களில் முகச்சுருக்கத்தை ஓரளவிற்கு நம்மால் போக்க முடியும். கேரட் சாறுடன், கடலை மாவை கலந்து பசை பதத்திற்கு கொண்டு வர வேண்டும். முகத்திற்கு தகுந்தாற்போல் இதன் அளவை எடுத்துக் கொள்ளலாம். இதை முகத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். அதன் பின்னர், முகத்தை கழுவி கொள்ளலாம்.
இதை தொடர்ச்சியாக செய்வதன் மூலம் 3 முதல் 7 நாள்களில் முகச்சுருக்கங்களை போக்க முடியும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“