/indian-express-tamil/media/media_files/2025/01/29/Ma96AD0ZjaHl1X8VXU9X.jpg)
இன்றைய சூழலில் பெரும்பாலானோர் நீண்ட நேரம் அமர்ந்து இருந்தே பார்க்கும் வேலையை செய்து வருகின்றனர். குறிப்பாக, ஐ.டி துறையில் வேலை பார்ப்பவர்கள் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் இருந்து தான் தங்கள் பணிகளை செய்ய வேண்டி இருக்கிறது.
இதன் காரணமாக சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் இளம் வயதிலேயே பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இப்படி அமர்ந்து இருக்கும் இடத்தில் இருந்தே ஒரு சிறிய உடற்பயிற்சி செய்யும் போது, நம் உடலில் இருந்து சர்க்கரை அளவைக் குறைக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Soleus Pushup என்ற பயிற்சியின் மூலமாக நம்மால் அமர்ந்து இருக்கும் இடத்தில் இருந்தே உடலில் சர்க்கரை அளவைக் குறைக்க முடியும் என மருத்துவர் அமரேசன் தெரிவித்துள்ளார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை பின்பற்றலாம் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
அதன்படி, ஒரு நாற்காலியில் அமர்ந்து இருக்கும் போது தங்களின் calf muscles-களை உயர்த்தலாம். இவ்வாறு ஒரு நாளில் சுமார் 4 மணி நேரம் 30 நிமிடங்களுக்கு செய்யலாம். நம் வசதிக்கேற்ப இடைவெளி எடுத்து இப்படி செய்தால், நாம் சாப்பிடும் ஒட்டுமொத்த குளுகோஸ் அளவில் 57 சதவீதத்தை குறைக்க முடியும் என்று மருத்துவர் அமரேசன் கூறுகிறார்.
உடற்பயிற்சி செய்வதற்காக நேரம் ஒதுக்க முடியாத சர்க்கரை நோயாளிகள் இது போன்ற சில தகவல்களை தெரிந்து கொண்டு பின்பற்றினால், அவர்களுக்கு சாதகமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.