/indian-express-tamil/media/media_files/2025/02/01/WYTxVbCMZdRp92mmtUk6.jpg)
நாள் முழுவதும் சோர்வு இல்லாமல் வேலை செய்ய வேண்டுமென்றால் நம் உடலுக்கு புரதம் மற்றும் அனிமோ ஆசிட்ஸ் ஆகியவை தேவையான அளவில் கிடைக்க வேண்டும்.
இதற்காக பல உணவு வகைகளை நாம் சாப்பிட வேண்டிய கட்டாயம் இருக்கும். இல்லையென்றால் வைட்டமின் மாத்திரைகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் அவற்றில் இருந்து சில சத்துகள் மட்டுமே நமக்கு கிடைக்கும்.
ஆனால், ஸ்பைருலினா என்று அழைக்கப்படக் கூடிய Blue Green Algae- வில் ஏராளமான சத்துகள் இருக்கிறது என மருத்துவர் அமுதா கூறுகிறார். குறிப்பாக, 100 ஆப்பிள்கள் மற்றும் 50 லிட்டர் பசும்பாலில் இருக்கக் கூடிய சத்துகள் இதில் இருந்து கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கார், பைக் ஆகியவற்றுக்கு பெட்ரோல் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு நாம் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு அமினோ ஆசிஸ் தேவைப்படுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அமினோ ஆசிட்ஸ், ஸ்பைருலினாவில் நிறைந்திருக்கிறது.
இந்த ஸ்பைருலினா ஒரு கீரை வகையைச் சேர்ந்தது என மருத்துவர் அமுதா கூறுகிறார். இவை நல்ல தண்ணீரில் விளையக் கூடியது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவை ஒரு காலகட்டத்தில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மட்டுமே பிரபலமாக கிடைத்தது.
ஆனால், தற்போது இவை இந்தியாவிலும் அதிகமாகவே கிடைக்கிறது. எனவே, சோர்வின்று சுறுசுறுப்பாக பணியாற்றவும், அதிகப்படியான அமினோ ஆசிட்ஸை பெறுவதற்கும் ஒரே தீர்வாக ஸ்பைருலினா இருக்கிறது என மருத்துவர் அமுதா குறிப்பிட்டுள்ளார். இவற்றை பொடியாகவும், மருந்து வடிவத்திலும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
நன்றி - Avizhtham Herbals Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.