/indian-express-tamil/media/media_files/2025/02/21/VdTgWv7sDag6uTISSdLJ.jpg)
ஸ்ட்ரோக் ஏற்படுவதை தடுப்பதற்கு சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மருத்துவர் அமுதா தெரிவித்துள்ளார்.
சர்க்கரை நோயாளிகள், உயர் இரத்த அழுத்த பிரச்சனை போன்றவற்றுக்காக இரவில் மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள், அந்த நேரத்தில் மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர் அமுதா தெரிவித்துள்ளார். அவ்வாறு கடும் மன அழுத்தத்திற்கு ஆளானால், மறுநாள் காலையில் ஸ்ட்ரோக் வருவதற்கு 10 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு நபர் தனது பணியை தானே செய்து கொள்ளும் வகையில் ஆரோக்கியமாக இருத்தல் அவசியம். உதாரணத்திற்கு சாப்பிடுவது, நடப்பது, கழிவறைக்கு செல்லுதல் போன்ற அனைத்து வேலைகளையும் தாமே செய்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். ஆனால், ஸ்ட்ரோக் நோயாளிகளுக்கு இவற்றை தங்களால் செய்து கொள்ள முடியாது.
இதன் காரணத்தினால் தான் அனைத்து நோய்களுடன் ஒப்பிடும் போது ஸ்ட்ரோக் மிகவும் கொடுமையானது என மருத்துவர் அமுதா தெரிவித்துள்ளார். மாரடைப்பு போன்று மூளையின் செயல்பாடுகள் பாதிப்பதை ஸ்ட்ரோக் எனக் கூறுகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் தான் இரவு நேரத்தில் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தத்திற்காக மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் அதிகமாக பதற்றம் அடையக் கூடாது என்றும், சண்டையிடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. எனவே, குறிப்பிட்ட நோயாளிகள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - Avizhtham Herbals Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.