வியர்வை கொப்பளத்திற்கு இயற்கை தீர்வு; இதை அப்படியே எடுத்து தடவுங்க! டாக்டர் அருண் குமார்
வெயில் காலத்தில் பலரும் வியர்க்குரு பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இந்த வியர்க்குருவிற்கு சரியான தீர்வு என்ன என்பதை மருத்துவர் அருண் குமார் விளக்கமாக தெரிவித்துள்ளார். அதனை இதில் காணலாம்.
வெயில் காலத்தில் பலரும் வியர்க்குரு பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இந்த வியர்க்குருவிற்கு சரியான தீர்வு என்ன என்பதை மருத்துவர் அருண் குமார் விளக்கமாக தெரிவித்துள்ளார். அதனை இதில் காணலாம்.
வெயில் காலத்தில் வியர்க்குரு ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து பல்வேறு தகவல்களை மருத்துவர் அருண் குமார் அளித்துள்ளார்.
Advertisment
நமது சருமத்தில் வியர்வை நாளங்கள் இருக்கின்றன. இந்த வியர்வை நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால் வியர்க்குரு உருவாகிறது என்று மருத்துவர் அருண் குமார் கூறியுள்ளார். வெயில் காலத்தில் இயற்கையாகவே வியர்வை அதிகமாக சுரக்கும். இந்த சூழலில் சருமம் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், சில பாதிப்புகள் ஏற்படும். வியர்வை வெளியேற முடியாமல் அதன் நாளங்கள் வீங்கும் போது வியர்க்குரு உருவாகும்.
இதற்கு தீர்வு தருவதாக சில பௌடர் நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன. சாதாரணமாகவே பௌடரில் டால்க் என்ற பொருள் இருக்கிறது. இது தவிர ஸின்க் ஆக்சைடும் சேர்க்கப்படுகிறது. இதேபோல், இந்த பௌடர்களில் கேம்போர் மற்றும் மென்தாலும் பயன்படுத்தப்படுவதால், இவை குளிர்ச்சியாக இருக்கின்றன.
ஆனால், இது போன்ற பௌடர்கள் வியர்க்குருவை கட்டுப்படுத்துவதில்லை என்று மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார். மாறாக இவை வியர்வையை உறிந்து கொள்ளும் பணியை செய்கின்றன. இவற்றை அதிகப்படியாக பயன்படுத்தும் போது, வியர்வை நாளங்களில் மேலும் அடைப்பை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.
Advertisment
Advertisements
அதன்படி, வியர்க்குருவிற்கு இயற்கையாக தீர்வு காண்பதற்கு கற்றாழையை பயன்படுத்தலாம் என்று மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார். எனவே, வியர்க்குரு மீது கற்றாழை ஜெல்லை சுத்தமாக கழுவி பயன்படுத்தலாம். இது தவிர பாக்டீரியா தொற்றுகளில் இருந்து பாதுகாப்பதற்காக ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும் என்று மருத்துவர் அருண் குமார் அறிவுறுத்துகிறார்.
மேலும், ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் அளவிற்கு தண்ணீர் குடிக்கலாம். வெயில் காலத்தில் மெலிதான காட்டன் ஆடைகள் அணிவதை பழக்கப்படுத்துக் கொள்ளலாம். வியர்க்குருவிற்கு பௌடர்கள் தீர்வு கொடுப்பதில்லை என்பதால், மருத்துவர்கள் அவற்றை பரிந்துரைப்பதில்லை என்று அருண் குமார் தெரிவித்துள்ளார். மேலும், வியர்க்குரு மிகத் தீவிரமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - Doctor Arunkumar Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.