சருமத்தின் நிறத்தை கேரட் ஜூஸ் மாற்றுமா? டாக்டர் அருண் குமார் விளக்கம்
கேரட் ஜூஸ் குடித்தால் சருமத்தின் நிறம் மாறும் என்று கூறப்படும் நிலையில், அதன் உண்மைத் தன்மை குறித்து மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார். அதனை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
கேரட் ஜூஸ் குடித்தால் சருமத்தின் நிறம் மாறும் என்று கூறப்படும் நிலையில், அதன் உண்மைத் தன்மை குறித்து மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார். அதனை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம் கருப்பாக இருப்பவர்கள் சிவப்பாக மாறலாம் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால், இயற்கையாக இருக்கும் நம் நிறத்தை மாற்றும் ஆற்றல் கேரட்டுக்கு இருக்கிறதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இதற்கான விளக்கத்தை மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
Advertisment
கேரட்டில் பீட்டா கரோட்டின் எனப்படும் அன்டி ஆக்சிடென்ட் இருக்கிறது. அதன்படி, கேரட் சாப்பிடும் போது அதில் இருந்து கிடைக்கும் பீட்டா கரோட்டின், மேலும் அதனால் உருவாகக் கூடிய வைட்டமின் ஏ ஆகியவை நம் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது என்று மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
எனவே, சரும பிரச்சனை இருப்பவர்களுக்கு கேரட், பப்பாளி மற்றும் ஈரல் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்துகின்றனர். ஆனால், அளவுக்கு அதிகமாக கேரட் சாப்பிடும் போது, ஒரு பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர் அருண் குமார் எச்சரிக்கை விடுக்கிறார். உதாரணத்திற்கு, ஒரு நாளைக்கு சுமார் அரை கிலோ அளவில் கேரட்டை தினசரி எடுத்துக் கொண்டால், கரோட்டினிமியா என்ற பிரச்சனை உருவாகும்.
அதாவது, பீட்டா கரோட்டின் மிக அதிகமாக சேர்ந்து, சருமம் முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் காட்சி அளிக்கும் என்று மருத்துவர் அருண் குமார் குறிப்பிடுகிறார். ஆனால், மெலனின் காரணமாக கருமையாக இருக்கும் நபரை, கேரட் சாப்பிடுவதன் மூலம் சிவப்பாக மாற்ற முடியாது என்று மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
அந்த வகையில், சருமத்தின் ஆரோக்கியத்திற்காக மட்டுமே கேரட் ஜூஸை அளவாக குடிக்க வேண்டும் என்று மருத்துவர் அருண் குமார் அறிவுறுத்துகிறார்.
நன்றி - Doctor Arunkumar Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.