ஹேர் டை பயன்படுத்துவதால் சிலருக்கு ஒவ்வாமைகள் ஏற்படுவதாக கூறுவார்கள். இப்படி ஒவ்வாமை ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்த விளக்கத்தை மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இரண்டு வகைகளாக ஹேர் டை பிரிக்கப்படுகிறது. அவை சின்தட்டிக் (Synthetic) மற்றும் இயற்கையான ஹேர் டை ஆகும். இதில் இயற்கையான ஹேர் டைய்யில் மொத்தம் இரண்டு பொருட்கள் பயன்படுகின்றன. ஒன்று மருதாணி; மற்றொன்று இண்டிகோ. இதில் இண்டிகோவும் ஒரு செடியில் இருந்து கிடைப்பது.
இது தவிர சின்தட்டிக் ஹேர் டைய்யில் 4 வகைகள் இருக்கின்றன. இதில் பெரும்பாலும் நிரந்தரமாக முடியின் நிறத்தை மாற்றும் ஹேர் டை தான் கடைகளில் விற்பனை செய்கிறார்கள். இந்த வகை ஹேர் டைய்யில் அம்மோன்னியா, ஹைட்ரஜன் பெராக்ஸைட் போன்ற இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இவை தான் முடியில் இருக்கும் நிறத்தையும் மாற்றுகிறது.
இவற்றை பயன்படுத்துவதால் தான் நிரந்தரமாக முடியின் நிறத்தை மாற்றும் ஹேர் டை உபயோகிப்பவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது என மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார். இந்த வகையான ஹேர் டைய்யில் இரசாயனங்கள் நிச்சயமாக சேர்ந்திருக்கும்.
எனினும், ஷம்பூ வகையான ஹேர் டைய்யில் இரசாயனங்கள் குறைந்த அளவில் சேர்க்கப்படுகின்றன. ஆனால், இவற்றை அடிக்கடி பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும். அதன்படி, மக்கள் எதிர்பார்ப்பதை போன்று நிரந்தரமாக முடியின் நிறத்தை மாற்றும் ஹேர் டைய்யில் இரசாயனங்கள் இல்லாமல் விற்பனை செய்ய முடியாது என மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.