சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பார்ப்பதால் இப்படி ஒரு ஆபத்தா? உஷார் மக்களே... டாக்டர் அருண் குமார் அட்வைஸ்
சமூக வலைதளங்களில் ஷார்ட்ஸ் வீடியோக்களை அதிகமாக பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார். இதனை கட்டுப்படுத்துவதற்கான காரணங்களை அவர் விளக்கியுள்ளார்.
சமீப நாட்களாக எந்த ஒரு வேலையையும் முழு கவனத்துடன் செய்ய முடியவில்லை என யோசித்துக் கொண்டு இருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் சரியாக படிக்காமலும், கவனமின்மையுடனும் இருப்பதாக நினைத்து கவலைப்படுகிறீர்களா? இதற்கான விளக்கத்தை மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
Advertisment
அந்த வகையில், அடிக்கடி சமூக வலைதளங்களில் ஷார்ட்ஸ் அல்லது ரீல்ஸ் எனப்படும் குறைந்த நேரம் கொண்ட வீடியோக்களை பார்ப்பது ஒரு காரணமாக இருக்கலாம் என மருத்துவர் அருண் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீப ஆண்டுகளில் ஷார்ட்ஸ் மற்றும் ரீல்ஸ் போன்ற வீடியோக்களை அதிகமாக பார்ப்பதனால், நமக்கு கவனம் செலுத்தும் ஆற்றல் குறைந்து வருவதாக பல ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக, Attention Deficit Hyperactivity Disorder என்று சொல்லக் கூடிய குறைபாட்டிற்கான அறிகுறிகள் குழந்தைகளிடம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதேபோல், பெரியவர்களிடம், சரியாக திட்டமிட்டு செயலாற்ற முடியாத பிரச்சனை அதிகரித்துள்ளதாகவும் மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தும் ஷார்ட்ஸ், ரீல்ஸ் வீடியோக்களை அதிகமாக பார்ப்பவர்களிடம் காணப்படுகிறது என ஆராய்ச்சிகளில் தெரிய வருகிறது. எனவே, குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது அதிகமாக ஷார்ட்ஸ் மற்றும் ரீல்ஸ்களை பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் என மருத்துவர் அருண் குமார் பரிந்துரைக்கிறார். இந்த நிலை தொடர்ந்தால், நிதானமாக யோசித்து முடிவு எடுக்க வேண்டிய திறன் இல்லாமல் போவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Advertisment
Advertisements
இதே நிலை பெரியவர்களுக்கும் பொருந்தும். எனவே, இவற்றை பார்ப்பதற்கு குறைவான அளவு நேரம் ஒதுக்கலாம் என மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார். இவை நம் நேரத்தை அதிகமாக எடுத்துக் கொள்வதுடன், நமது சிந்திக்கும் திறனையும் பாதிக்கிறது.
நன்றி - Doctor Arunkumar Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.