சருமத்திற்கு பௌடர் பயன்படுத்தினால் ஆபத்து ஏற்படுமா? உண்மையை உடைத்த மருத்துவர் அருண் குமார்!
நம் சருமத்திற்கு பௌடர் பூசினால் ஆபத்து ஏற்படுமா என்பதற்கான விளக்கத்தை மருத்துவ ஆதாரங்களுடன் டாக்டர் அருண் குமார் விளக்கியுள்ளார். அதனை இந்தக் குறிப்பில் நாம் விரிவாக பார்க்கலாம்.
நம் சருமத்திற்கு பௌடர் பூசினால் ஆபத்து ஏற்படுமா என்பதற்கான விளக்கத்தை மருத்துவ ஆதாரங்களுடன் டாக்டர் அருண் குமார் விளக்கியுள்ளார். அதனை இந்தக் குறிப்பில் நாம் விரிவாக பார்க்கலாம்.
நம்மில் பலருக்கு முகத்தில் பௌடர் பூசிக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. இவ்வாறு பௌடர் பயன்படுத்துவதால் பல்வேறு பிரச்சனைகள் வரக் கூடும் என்று சிலர் கூறுகின்றனர். இதில் இருக்கும் உண்மைத் தன்மை குறித்து மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
Advertisment
பௌடரின் வேதியியல் பெயர் டால்கம் பௌடர் ஆகும். டால்க் என்று கூறப்படும் ஒரு மினரலில் இருந்து இது வருவதால் இவ்வாறு அழைக்கின்றனர். மெக்னீஷியம், சிலிகாட் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை சேர்ந்த கலவை தான் டால்க். இதனை பொடியாக அரைக்கும் போது தான் பௌடர் உருவாகிறது.
முகத்தை பொலிவாக மாற்றுவதற்காக இந்த பௌடரை பல காலமாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், இந்த பௌடரை பயன்படுத்தும் போது அவை சுவாசம் மூலமாக நுரையீரலுக்கு சென்றால் ஒவ்வாமை அல்லது எரிச்சலை ஏற்படுத்தக் கூடும் என்று மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார். எனவே, ஆஸ்துமா அல்லது தும்மல் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் பௌடர் உபயோகிப்பதை தவிர்த்து விடலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
இந்த பௌடரை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது அவை நம் முகத்தில் இருக்கும் இயற்கையான துவாரங்களை அடைத்து விடும். இதன் காரணமாக சருமம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படக் கூடும். இது மட்டுமல்லாமல், பெண் குழந்தைகளுக்கு பௌடர் பயன்படுத்தும் போது அவை கேன்சர் பரவும் அபாயத்தை ஏற்படுத்துவதாக மருத்துவர் அருண் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Advertisment
Advertisements
பொதுவாக குழந்தைகளுக்கு உடல் முழுவதும் பௌடர் போட்டு விடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. அப்படி பெண் குழந்தைகளுக்கு இந்த பௌடரை போட்டால், சினைப்பை கேன்சர் பரவக் கூடும் என்று மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார். இது டால்க் பௌடரால் ஏற்படுவதில்லை. பாறைகளில் இருந்து டால்கை எடுக்கும் போது அத்துடன் அஸ்பெஸ்டாஸ் என்ற மற்றொரு கணிமமும் சேர்ந்து இதில் கலப்பதால், கேன்சர் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, சில பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் பௌடர் பயன்படுத்துவதை தவிர்த்து விடலாம் என்று மருத்துவர் அருண் குமார் பரிந்துரைக்கிறார்.
நன்றி - Doctor Arunkumar Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.