கேன்சர், மாரடைப்புக்கு காரணம்; அசைவ உணவுகளில் இந்த தப்பை பண்ணாதீங்க: டாக்டர் அருணாசலம்
புற்றுநோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய உணவுக் கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவர் அருணாசலம் தெரிவித்துள்ளார். அவற்றை தற்போது பார்க்கலாம்.
இருதய நோயாளிகள் பின்பற்றக் கூடிய உணவு முறைகள் குறித்து மருத்துவர் அருணாசலம் பல்வேறு தகவல்களை பரிந்துரைத்துள்ளார். இவற்றை இருதய நோயாளிகள் மட்டுமின்றி சர்க்கரை நோயாளிகள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும் பின்பற்றலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
கார்போஹைட்ரேட்கள், புரதம், லிபிட்ஸ், மினரல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உணவுகள் பிரிக்கப்படுகின்றன. இந்தியர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணம், அதிகமாக அரிசி மற்றும் கோதுமை உணவுகளை சாப்பிடுவது தான் என பலர் கூறுகின்றனர். ஆனால், இந்தக் கூற்று தவறானது என மருத்துவர் அருணாசலம் தெரிவித்துள்ளார்.
40 ஆண்டுகளுக்கு முன்னரும் அரிசி மற்றும் கோதுமையை தான் உணவாக எடுத்துக் கொண்டோம். ஆனால், அப்போது இந்த அளவிற்கு சர்க்கரை நோய் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, பட்டை தீட்டப்பட்ட அரிசி மற்றும் கோதுமை தான் சர்க்கரை நோய் அதிகரித்ததற்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
இவற்றை தடுப்பதற்கு அதிகப்படியாக பட்டை தீட்டப்படாத பாரம்பரிய அரிசி, கோதுமை வகைகளை சாப்பிடலாம் என்று அவர் பரிந்துரைத்துள்ளார். இது தவிர கம்பு, சாமை, வரகு போன்ற வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். புரதத்தை பொறுத்தவரை மீன் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர் அருணாசலம் தெரிவித்துள்ளார். இதை அதிகமாக எண்ணெய்யில் பொறித்து சாப்பிடாமல், வேகை வைத்து அல்லது குழம்பு வைத்து சாப்பிடலாம்.
Advertisment
Advertisement
இதேபோல், சிக்கனையும் நன்றாக தோல் நீக்கி குழம்பாக அல்லது தந்தூரி வகைகளாக சாப்பிடலாம். இது போன்ற இறைச்சிகளை பொறித்து சாப்பிடுவது கேன்சர் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர் அருணாசலம் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.