வெயில் நேரத்துல கரும்பு ஜூஸ்... உடம்புக்கு எந்த அளவுக்கு நல்லது? டாக்டர் அருண்குமார் ஓபன் டாக்

கரும்புச் சாறு குடிப்பது உடலுக்கு நல்லதா என்று மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அதனை எந்த அளவிற்கு குடிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கரும்புச் சாறு குடிப்பது உடலுக்கு நல்லதா என்று மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அதனை எந்த அளவிற்கு குடிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Sugarcane juice

வெயில் காலம் என்றாலே உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக் கூடிய நிறைய ஜூஸ் வகைகளை பொதுமக்கள் விரும்பி பருகுவார்கள். குறிப்பாக, கரும்புச் சாறு குடிப்பதற்கு பலருக்கு பிடிக்கும். அந்த வகையில் கரும்புச் சாறு குடிப்பது உடலுக்கு நல்லதா என்றும், எந்த அளவிற்கு குடிக்கலாம் என்று மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

அந்த வகையில், 100 மில்லி லிட்டர் கரும்புச் சாறில் ஏறத்தாழ 50 முதல் 55 கலோரிகள் வரை நிறைந்திருக்கிறது. இந்தக் கலோரிகள் பெரும்பாலும் மாவுச் சத்தை கொடுக்கின்றன. மேலும், 10 கிராம் சுக்ரோஸ் மற்றும் 2.5 கிராம் குளூக்கோஸ் இருக்கிறது என்று மருத்துவர் அருண் குமார் கூறுகிறார். எனினும், இதில் 0.5 கிராம் அளவு கூட நார்ச்சத்து கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர 100 மில்லி லிட்டர் கரும்புச் சாறில் 1 மில்லி கிராம் மட்டுமே இரும்புச் சத்து இருக்கிறது. இதைவிட கீரை வகைகளில் அதிகமான இரும்புச் சத்து நமக்கு கிடைக்கிறது. மேலும், 100 மில்லி லிட்டர் கரும்புச் சாறில் 18 மில்லி கிராம் மட்டுமே கால்சியம் சத்து இருக்கிறது. 

வைட்டம்ன் சி சத்தும் வெறும் 6 மில்லி கிராம் மட்டுமே கரும்புச் சாறில் இருக்கிறது. ஆனால், 100 கிராம் நெல்லிக்காயில் 550 முதல் 600 மில்லி கிராம் வரை வைட்டமின் சி சத்து இருக்கிறது. எனவே, இது போன்ற சத்துகள் அனைத்தும் கரும்புச் சாறில் மிகவும் குறைவாக இருப்பதாகவே மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

அதனால், கரும்புச் சாறை சுவைக்காக மட்டும் எப்போதாவது குடிக்கலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார். ஆனால், அடிக்கடி கரும்புச் சாறு குடித்தால் மெட்டபாலிக் சின்ரோம், சர்க்கரை நோய் மற்றும் கல்லீரல் கொழுப்பு ஆகிய பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்று அவர் எச்சரிக்கை விடுக்கிறார்.

நன்றி - Doctor Arunkumar Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Can diabetic patients have sugarcane juice?

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: