சமீப நாட்களாக முட்டை அதிகளவில் சாப்பிட்டால் கேன்சர் வரும் என சிலர் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். அதனடிப்பையில், இருக்கும் உண்மைத் தன்மை குறித்து மருத்துவர் அருண் குமார் அறிவியல் ரீதியாக விளக்கம் அளித்துள்ளார். அவற்றை தற்போது காணலாம்.
முட்டையில் இருக்கும் புரதத்தை ரெஃபரன்ஸ் ப்ரோட்டின் எனக் கூறுவார்கள். அதாவது மற்ற ப்ரோட்டின்கள் நல்லதா என்பதை ஆராய்ந்து பார்ப்பதற்கு முட்டையில் இருக்கும் ப்ரோட்டினை ஒப்பிட்டு பார்ப்பதாக மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, முட்டையில் கொலின் இருப்பதாகவும், அவை உடலில் TMAO-வை உருவாக்கி கேன்சர் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறுகின்றனர். ஆனால், ஊட்டச்சத்து குறித்து அடிப்படை புரிதல் இல்லாதவர்கள் மட்டும் தான் இப்படி கூறுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
கொலின் என்பது கர்ப்பிணி பெண்களுக்கு அடிப்படையான சத்து என்றும், அதில் பற்றாக்குறை ஏற்பட்டால் குழந்தையின் முதுகுத் தண்டில் பாதிப்பு ஏற்படும் என்றும் அருண் குமார் கூறுகிறார். அதன் காரணத்தினால் தான் சைவ உணவுகள் சாப்பிடுபவர்கள் கூட எப்படியாவது கொலின் எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் கூறுகிறார்.
ஆனால், கொலினை நேரடியாக மாத்திரையாக எடுத்தால் மிக அரிதாக TMAO உருவாக வாய்ப்பு இருக்கிறது. எனினும், முட்டையில் இருந்து கேன்சர் உருவாகும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் இல்லை என மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.