பலாக்காய் மாவில் நார்ச்சத்து இருப்பதால், அதை சப்பாத்தி மாவில் கலந்து சாப்பிடும் போது சர்க்கரை அளவு குறைவதாக பலரும் கூறுகின்றனர். இதை அறிந்து கொள்ள முதலில் பலாக்காய் மாவிற்கும், கோதுமை மாவிற்கும் என்ன வித்தியாசம் என அறிந்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர் அருண்குமார் கூறுகிறார்.
100 கிராம் பலாக்காய் மாவில் 78 கிராம் கார்போஹைட்ரேட்ஸ் இருக்கிறது. மேலும், 16 கிராம் நார்ச்சத்து இருக்கிறது. கோதுமை மாவில் 72 முதல் 74 கிராம் வரை கார்போஹைட்ரேட்ஸ் இருக்கிறது. 12 கிராம் நார்ச்சத்து இருக்கிறது.
மேலும், 100 கிராம் கோதுமை மாவில் 12 கிராம் புரதம் காணப்படுகிறது. பலாக்காய் மாவில் 9 கிராம் தான் புரதம் உள்ளது. இதன் மூலம் பெரிய அளவு வித்தியாசத்தை உருவாக்க முடியாது என மருத்துவர் அருண்குமார் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சர்க்கரை நோயை அதிகப்படியாக குறைக்கும் அளவிற்கான தன்மை இதில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். சாதாரணமாக புரதம் நிறைந்த உணவு பொருள்களை சாப்பிட்டு டயட் இருப்பவர்களுக்கு கூட சர்க்கரையின் அளவு குறைவாகவே இருக்கும்.
அதன்படி, கார்போஹைட்ரேட்ஸ் உணவுகளை குறைத்து, புரதம், காய்கறிகளை தவறாமல் எடுத்துக் கொண்டால் தான் சர்க்கரை குறையும் என மருத்துவர் அருண்குமார் அறிவுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.