டெய்லி வாக்கிங் போனால் கொழுப்பு குறையுமா? உண்மையை உடைக்கும் டாக்டர் அருண்குமார்!

தினசரி நடைபயிற்சி மேற்கொண்டால் கொழுப்பு குறையுமா என்ற கேள்விக்கு மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக, இதன் உண்மைத் தன்மை குறித்து அவர் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Walking Explain

இரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருப்பவர்கள் தொடர்ச்சியாக நடைபயிற்சி செல்வது வழக்கம். எனினும், இவ்வாறு நடைபயிற்சி மேற்கொள்ளும் போது கொழுப்பு குறையுமா என்ற கேள்வி பலரிடம் இருக்கும். இந்த கேள்விக்கு மருத்துவர் அருண் குமார் பதிலளித்துள்ளார்.

Advertisment

உடலில் எல்.டி.எல் என்ற வகை கொலஸ்ட்ரால் இருக்கிறது. இது 180 முதல் 190 மில்லி கிராம் அளவிற்கு இருந்தால் அவர்களுக்கு உடற்பயிற்சி பலன் அளிக்காது என மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் உடற்பயிற்சிகள் மூலமாக எல்.டி.எல் கொலஸ்ட்ராலை குறைக்க முடியவில்லை என்று தெரிய வருகிறது.

இந்த வகையான கொலஸ்ட்ரால் வயது காரணமாகவும், மரபணு ரீதியாகவும் நிர்ணயிக்கப்படுகிறது என்று மருத்துவர் அருண் குமார் கூறியுள்ளார். எனவே, எல்.டி.எல் கொலஸ்ட்ராலால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயமாக மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் தீவிர உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என மருத்துவர் அருண் குமார் பரிந்துரைக்கிறார்.

இது தவிர ட்ரைகிளசரைட் வகையிலான கொலஸ்ட்ரால் இருந்தால் சரியான உடற்பயிற்சி மற்றும் சீரான உணவு முறைகள் மூலம் அதனை குறைக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதேபோல், மாவுச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும், ஹெச்.டி.எல் வகையான கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் அவசியம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இவை மாரடைப்பு, இரத்தக் குழாய் அடைப்பு போன்றவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, ஒரு நபர் தனது கொலஸ்ட்ராலுக்கான காரணம் அறிந்து அதற்கு ஏற்ற வகையில் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றத்தை பின்பற்ற வேண்டும் என மருத்துவர் அருண் குமார் அறிவுறுத்துகிறார்.

நன்றி - Doctor Arunkumar Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Causes of high cholesterol Best tips to manage bad cholesterol

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: