ஜஸ்ட் ஒரு ட்ராப் போதும்... நுரையீரல் கழுவி விட்டது மாதிரி இருக்கும்: டாக்டர் ஆஷா லெனின் டிப்ஸ்
ஆடாதோடா மூலிகை ஹோமியோபதி மருத்துவத்தில் எவ்வாறு பயன்படுகிறது என்று தெரிவித்துள்ள மருத்துவர் ஆஷா லெனின், இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சளித் தொல்லை அனைத்து விதமான காலநிலை மாற்றத்திலும் சாதாரணமாக ஏற்படக் கூடிய ஒன்று தான். அதற்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து குறித்து மருத்துவர் ஆஷா லெனின் பரிந்துரைத்துள்ளார்.
Advertisment
சளி, இருமல் போன்ற தொல்லைகளுக்கு காலங்கலாமாக பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகையாக ஆடாதோடா விளங்குகிறது என மருத்துவர் ஆஷா லெனின் தெரிவித்துள்ளார். ஹோமியோபதி மருத்துவ முறையில் இதனை ஜஷ்டிஷியா எனக் கூறுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நம் வீட்டின் அருகே இருக்கும் ஹோமியோபதி மருத்துவரிடம் சென்று ஜஷ்டிஷியா ஆடாதோடா மருந்தை 10 மில்லி லிட்டர் வாங்கிக் கொள்ளலாம் என மருத்துவர் ஆஷா லெனின் அறிவுறுத்துகிறார். இந்த மருந்து மூலம் குழந்தைகளுக்கு இருக்கும் சளி, இருமல் பிரச்சனையை ஈசியாக போக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்பும் ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு துளி மட்டும் இந்த மருந்தை கலந்தால் போதும். இதனால், தண்ணீரின் தரம், ருசி மற்றும் மனம் என எதுவும் மாறாது. இவ்வாறு தினசரி தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
இப்படி செய்து வந்தால் நம் நுரையீரல் கழுவி விட்டதை போன்று இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, சளி, இருமலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இந்த மருந்தை 8 துளிகளும், பெரியவர்களுக்கு 30 துளிகளும் கொடுக்கலாம் என மருத்துவர் ஆஷா லெனின் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த மருந்தை பயன்படுத்துவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட ஹோமியோபதி மருத்துவரிடம் கலந்து ஆலோசனை செய்து அவரது அறிவுறுத்தலின் பேரில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் ஆஷா லெனின் தெரிவித்துள்ளார்.
நன்றி - Dr.Asha Lenin Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.