/indian-express-tamil/media/media_files/2025/05/09/fmLPkIkvHEcKISflrCqz.jpg)
இன்றைய சூழலில் பலரும் இளநரை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, உணவு முறை மாற்றம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் என்று பல்வேறு காரணங்களால் இளநரை பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது தவிர மரபியல் பிரச்சனையின் விளைவாகவும் இந்த பாதிப்பு உருவாகிறது. இதை மறைக்க இரசாயனம் கலந்த ஹேர் டையை பலர் பயன்படுத்துகின்றனர்.
இவை பல பிரச்சனைகளை உருவாக்கக் கூடும். உதாரணமாக, இரசாயன ஹேர் டையில் பாரா-ஃபீனிலெனெடியமைன் (PPD) போன்ற இரசாயனங்கள் உள்ளன. இது சிலருக்கு தோல் அரிப்பு, சிவத்தல், வீக்கம், மற்றும் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தலாம். கடுமையான இரசாயனங்கள் முடியின் இயற்கையான எண்ணெயை அகற்றி, அதை வறண்டதாகவும், உடையக்கூடியதாகவும், பலவீனமானதாகவும் மாற்றும்.
அந்த வகையில், மருதாணி மற்றும் டீத்தூள் கொண்டு இயற்கையான ஹேர் டை எவ்வாறு தயாரிக்கலாம் என்று மருத்துவர் ஆஷா லெனின் தெரிவித்துள்ளார். ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் டீத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீர் முக்கால் கிளாஸ் அளவிற்கு கொதித்ததும், அத்துடன் சேர்த்து மருதாணி இலையை அரைக்க வேண்டும்.
அதன் பின்னர், திரிபலா பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து இத்துடன் கலக்க வேண்டும். இந்தக் கலவையை இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். அடுத்த நாள் காலை அரிசி வடித்த கஞ்சியை இத்துடன் சேர்த்து லேசாக சூடுபடுத்த வேண்டும்.
இந்த ஹேர்பேக்கை தலையில் தேய்த்து விட்டு சுமார் 10 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இப்படி செய்யும் போது நரை முடி மறையும் என்று மருத்துவர் ஆஷா லெனின் அறிவுறுத்துகிறார். மேலும், இதற்காக செயற்கையான ஹேர் டை பயன்படுத்த வேண்டியது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - Behindwoods Hits Yotube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.