அடிக்கடி சுயஇன்பம்... குழந்தை பிறப்பு பாதிக்குமா? டாக்டர் அசோக் 'நச்' பதில்
சுய இன்பம் செய்வதால் குழந்தை பிறப்பில் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவர் அசோக் அறிவியல்பூர்வமான விளக்கத்தை தெரிவித்துள்ளார். அதனை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
சுய இன்பம் செய்வதால் குழந்தை பிறப்பில் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவர் அசோக் அறிவியல்பூர்வமான விளக்கத்தை தெரிவித்துள்ளார். அதனை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
ஒரு நாளைக்கு சுமார் 200 முதல் 300 மில்லியன் வரை விந்தணுக்கள் உற்பத்தி ஆகும் என்று மருத்துவர் அசோக் கூறுகிறார். அந்த வகையில், சராசரியாக ஒரு வினாடிக்கு 1500 விந்தணுக்கள் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
ஒருவரது உடலில் சுமார் 3 நாட்கள் வரை ஆரோக்கியமான முறையில் விந்தணுக்கள் ஸ்டோர் ஆகி இருக்கும் என்று மருத்துவர் அசோக் கூறுகிறார். அதற்கு மேல் இவை இருக்கும் போது, அதன் உயிர்த்தன்மை குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
எனவே, ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு சுய இன்பம் செய்யாமல் இருந்தால் ஆரோக்கியமான விந்தணுக்கள் அப்படியே இருக்கும். ஆனால், அதற்கு பின்னர் புதிதாக உருவாகும் விந்தணுக்களுக்காக அவை, உயிர்த்தன்மையை இழந்து விடும்.
அதனடிப்படையில், குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் சுமார் மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு விந்துவை வெளியேற்றாமல் இருந்தால், அவை ஆரோக்கியமான உயிரணுக்களாக இருக்கும் என்று மருத்துவர் அசோக் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
இது தவிர சுய இன்பம் செய்வதன் மூலம் சில நன்மைகளும் கிடைக்கின்றன. நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்தல், மன அழுத்தம் குறைதல், புற்றுநோயை தடுத்தல் மற்றும் தூக்கத்தில் விந்து வெளியேறுதலை தடுத்தல் ஆகியவை சுய இன்பம் மூலம் பெறப்படும் நன்மைகள் என்று மருத்துவர் அசோக் கூறுகிறார்.
மேலும், தினசரி அதிகப்படியான விந்தணுக்கள் உற்பத்தி ஆவதால், சுய இன்பம் செய்தால் விந்தணுக்கள் குறையும் என்ற கவலை தேவை இல்லை என்று மருத்துவர் அசோக் தெரிவித்துள்ளார். மேலும், நீண்ட நாட்களுக்கு சுய இன்பம் செய்யாமல் இருக்கும் போது தான் விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்று நினைப்பது தவறு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், திருமணம் ஆனவர்கள் ஆகியோர் சுய இன்பம் மேற்கொள்வதால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று மருத்துவர் அசோக் அறிவுறுத்துகிறார்.
நன்றி - Sri Chakra Health care Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.