நுரை நுரையாய் சிறுநீர்? இந்த பாதிப்பாக இருக்கும்: விளக்கும் டாக்டர் பாலாஜி ரவில்லா
சிறுநீர் மஞ்சள் நிறமாகவும், நுரை, நுரையாகவும் இருப்பதற்கான காரணத்தை மருத்துவர் பாலாஜி ரவில்லா தெரிவித்துள்ளார். அதனை இந்த செய்திக் குறிப்பில் நாம் பார்க்கலாம்.
சிறுநீர் மஞ்சள் நிறமாகவும், நுரை, நுரையாகவும் இருப்பதற்கான காரணத்தை மருத்துவர் பாலாஜி ரவில்லா தெரிவித்துள்ளார். அதனை இந்த செய்திக் குறிப்பில் நாம் பார்க்கலாம்.
சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது மஞ்சள் நிறமாக இருக்கும். இவ்வாறு இருந்தால் நிறைய தண்ணீர் குடிக்க பரிந்துரைப்பார்கள். ஆனால், சில சமயங்களில் வேறு விதமான பாதிப்புகளாலும் சிறுநீர் மஞ்சள் நிறமாகவும், நுரையாகவும் இருக்கும் என்று மருத்துவர் பாலாஜி ரவில்லா தெரிவித்துள்ளார்.
Advertisment
அந்த வகையில் சிறுநீர் அடர் மஞ்சள் நிறமாக வெளியேறினால், மஞ்கள் காமாலை பாதிப்பாக இருக்கலாம். சில சமயத்தில் மருந்துகளின் ஒவ்வாமை காரணமாக கூட சிறுநீர் மஞ்சள் நிறமாக வெளியேறலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இதற்கான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம்.
இது தவிர பாக்டீரியா பாதிப்பு இருந்தால் சிறுநீர் வெளியேறும் போது நுரையாக இருக்கும். இதே போன்று சிலருக்கு சிறுநீர் வெளியேறும் போது அத்துடன் விந்து வெளியானால், நுரையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
மேலும், ஃபேட்டி லிவர் பாதிப்பு இருப்பவர்களுக்கு சிறுநீரில் அதன் அறிகுறிகள் இருக்கலாம் என்று மருத்துவர் பாலாஜி ரவில்லா கூறுகிறார். எனவே, சிறுநீரில் இது போன்ற மாற்றம் இருப்பவர்கள் உடனடியாக அதற்கான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் பாலாஜி ரவில்லா அறிவுறுத்துகிறார்.
Advertisment
Advertisements
நன்றி - Cosmo Health Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.