இனிமே அதிகம் கோபப்படாதீங்க... இந்த ராஜ உறுப்புல கொழுப்பு கூடுமாம்: சொல்லும் டாக்டர் சொக்கலிங்கம்!
கல்லீரலில் கொழுப்பு படிவதற்கான காரணம் குறித்து மருத்துவர் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கல்லீரலில் கொழுப்பு படிவதற்கான காரணம் குறித்து மருத்துவர் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது நிறைய பேருக்கு ஃபேட்டி லிவர் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏதேனும் மருத்துவ பரிசோதனைக்காக மேற்கொள்ளும் ஆய்வுகளின் மூலமாக மட்டுமே இவ்வாறு கல்லீரலில் கொழுப்பு படிந்திருப்பதை கண்டறிய முடிகிறது. இதன் ஆபத்து குறித்து மருத்துவர் சொக்கலிங்கம் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.
Advertisment
உடல் பருமனாக இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், சீரான உடல் உழைப்பு இல்லாதவர்கள், புகைப்பழக்கம் இருப்பவர்கள் மற்றும் மது அருந்துபவர்களுக்கு ஃபேட்டி லிவர் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்று மருத்துவர் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாம் எடுத்துக் கொள்ளும் உணவு சீராக செரிமானம் ஆகாமல் இருக்கும்பட்சத்திலும் கல்லீரலை சுற்றி கொழுப்பு படிவதற்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, தொப்பை இருப்பவர்களுக்கு கட்டாயம் ஃபேட்டி லிவர் இருக்கும் என்று அவர் கூறுகிறார்.
துரித உணவுகள் அதிகமாக சாப்பிடுவது ஃபேட்டி லிவர் ஏற்பட காரணமாக அமையும். இதேபோல், உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பவர்களும் இதில் பாதிக்கப்படுகின்றனர். அதிகமாக கோபம் கொண்டு டென்ஷனாக இருப்பவர்களுக்கும் ஃபேட்டி லிவர் வரக் கூடும் என்று மருத்துவர் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
கல்லீரலை சுற்றிலும் கொழுப்பு அதிகமாக படியும் போது, அதன் இயக்கம் சீராக இல்லாமல் போகும். இன்றைய காலத்தில் கல்லீரலில் புற்றுநோய் உருவாகும் நிலைக்கு கூட ஃபேட்டி லிவர் அழைத்துச் செல்கிறது என்று கூறப்படுகிறது.இதனை சீராக்க சில வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர் சொக்கலிங்கம் அறிவுறுத்துகிறார்.
முதலாவதாக அதிக உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்கள், சீரான உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். அடுத்தபடியாக, எளிதில் செரிமானம் ஆகக் கூடிய சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து, அடிக்கடி கோபம் கொள்ளும் சூழலை தவிர்க்க வேண்டும்.
இத்தகைய விஷயங்களை பின்பற்றினால் ஃபேட்டி லிவர் பாதிப்பில் இருந்து மீண்டு வரலாம் என்று மருத்துவர் சொக்கலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
நன்றி - Cosmo Health Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.