கொத்து கொத்தாக கொட்டும் முடி... 'இந்த ஆயில் இதுவரை தோற்றுப் போனதே இல்ல': சொல்லும் டாக்டர் தீபா
முடி உதிர்வு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் பயனப்டுத்தக் கூடிய ஹேர் ஆயில் குறித்து மருத்துவர் தீபா தெரிவித்துள்ளார். இதனை பயன்படுத்தினால் முடி அடர்த்தியாக வளரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முடி உதிர்வு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் பயனப்டுத்தக் கூடிய ஹேர் ஆயில் குறித்து மருத்துவர் தீபா தெரிவித்துள்ளார். இதனை பயன்படுத்தினால் முடி அடர்த்தியாக வளரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய சூழலில் ஆண் மற்றும் பெண் என அனைத்து பாலினத்தவரும் முடி உதிர்வு பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம் என பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் முடி உதிர்வு பிரச்சனைக்கான தீர்வை மருத்துவர் தீபா தெரிவித்துள்ளார்.
Advertisment
வழக்கமாக முடிக்கு தேங்காய் எண்ணெய் வைக்கும் பழக்கம் தான் பலரிடம் இருக்கும். ஆனால், அதற்கு மாற்றாக நல்லெண்ணெய் என்று அழைக்கப்படும் எள் எண்ணெய்யை தலைக்கு பயன்படுத்தலாம் என்று மருத்துவர் தீபா அறிவுறுத்துகிறார். குறிப்பாக, தலைக்கு நல்லெண்ணெய் வைத்து சுமார் 30 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம் என்று அவர் கூறுகிறார்.
இது தவிர சில பொருட்களைக் கொண்டு நாமே எண்ணெய்யை தயாரித்துக் கொள்ளலாம். அதன்படி, 50 கிராம் குன்றிமணியை வாங்கி வெள்ளைத் துணியில் மடித்து கட்ட வேண்டும். இந்த துணியை கொதிக்கும் பாலில் வைத்து விட வேண்டும். இவ்வாறு சுமார் 15 நிமிடங்கள் கழித்த பின்னர், குன்றிமணியை வெளியே எடுத்து விடலாம்.
இப்போது, ஒரு லிட்டர் நல்லெண்ணெய்யில் காய்த்து எடுத்த குன்றிமணி, ஒரு கைப்பிடி கரிசலாங்கண்ணி, காய வைத்த நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்த்து காய்க்க வேண்டும். இதன்பின்னர், வடிகட்டி வேறு ஒரு பாட்டிலில் மாற்றி பயன்படுத்தலாம்.
Advertisment
Advertisements
இது போலவே, மற்றொரு எண்ணெய்யையும் தயாரித்து பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் நல்லெண்ணய்க்கு 50 கிராம் அவுரி பொடி, 50 கிராம் கரிசலாங்கண்ணி, 6 காட்டு நெல்லிக்காய், ஒரு பெரிய கற்றாழையின் ஜெல், மூன்று டேபிள் ஸ்பூன் வெந்தயம், 10 செம்பருத்திப் பூ, ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, மருதாணி பூ, மருதாணி இலை, 50 கிராம் கருஞ்சீரகம், 6 பல் பூண்டு மற்றும் 10 சின்ன வெங்காயம் ஆகிய அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் இரும்பு கடாய் வைத்து நல்லெண்ணெய்யை அதில் ஊற்றி காய வைக்க வேண்டும். அப்போது, இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட வேண்டும். இந்தக் கலவையை புகை வரும் வரை காய்க்க வேண்டும். அதன் பின்னர் ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றிக் கொள்ளலாம்.
இந்த எண்ணெய்யையும் தலையில் தேய்த்து விட்டு அதன் பின்னர் சுமார் 30 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இவ்வாறு செய்தால் முடியின் வளர்ச்சி அடர்த்தியாக இருக்கும் என்று மருத்துவர் தீபா தெரிவித்துள்ளார்.
நன்றி - Mai Health360 Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.