குறட்டை பிரச்சனை நீங்கி நல்ல தூக்கம் வர… கசகசாவை இப்படி யூஸ் பண்ணுங்க; டாக்டர் தீபா
குறட்டை பிரச்சனைக்கு வீட்டு வைத்திய முறையில் எவ்வாறு எளிமையாக தீர்வு காணலாம் என்று மருத்துவர் தீபா விளக்கம் அளித்துள்ளார். அவற்றை இந்த செய்திக் குறிப்பில் விரிவாக பார்க்கலாம்.
குறட்டை பிரச்சனைக்கு வீட்டு வைத்திய முறையில் எவ்வாறு எளிமையாக தீர்வு காணலாம் என்று மருத்துவர் தீபா விளக்கம் அளித்துள்ளார். அவற்றை இந்த செய்திக் குறிப்பில் விரிவாக பார்க்கலாம்.
நாம் தூங்கும் போது, நமது தொண்டை மற்றும் சுவாசப் பாதையில் உள்ள தசைகள் தளர்வடைகின்றன. சிலருக்கு இந்தத் தசைகள் அதிகமாகத் தளர்வடையும்போது, சுவாசப் பாதை குறுகலாகி விடுகிறது. நாம் சுவாசிக்கும்போது, காற்று இந்த குறுகலான பாதை வழியாகச் செல்லும் போது, தொண்டையில் உள்ள மென்மையான திசுக்கள் அதிர்வடைகின்றன. இந்த அதிர்வு நாம் கேட்கும் குறட்டைச் சத்தத்தை ஏற்படுத்துகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Advertisment
அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு கழுத்தைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்பு சுவாசப்பாதையைச் சுருக்கலாம். இதனால் அவர்களுக்கு குறட்டை வரும் வாய்ப்பு இருக்கிறது. சளி, ஒவ்வாமை அல்லது சைனஸ் பிரச்சனைகள் காரணமாக மூக்கடைப்பு ஏற்பட்டால், வாய் வழியாக சுவாசிக்க வேண்டியிருக்கும். இது குறட்டைக்கு வழிவகுக்கும். போதுமான தூக்கம் இல்லாதது தொண்டை தசைகளை அதிகமாகத் தளர்வடையச் செய்யலாம்.
அந்த வகையில், குறட்டை பிரச்சனைக்கு வீட்டு வைத்திய முறையில் எவ்வாறு தீர்வு காணலாம் என்று மருத்துவர் தீபா தெரிவித்துள்ளார். இதற்காக 2 பாதாம், 8 பூசணி விதைகள் மற்றும் அரை டீஸ்பூன் கசகசா ஆகிய மூன்றையும் அரை கிளாஸ் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக ஊறியதும் அதில் இருக்கும் பாதாம் தோலை நீக்க வேண்டும். அதன் பின்னர், இவற்றை மிக்ஸியில் அரைத்து தேன் கலந்து சாப்பிடலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும் என்று மருத்துவர் தீபா கூறுகிறார். இது மட்டுமின்றி குறட்டை பிரச்சனைக்கும் இது தீர்வாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், உறங்கும் போது இடது புறமாக சாய்ந்து தூங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.
Advertisment
Advertisements
எனவே, குறட்டை பிரச்சனை இருப்பவர்கள் இந்த முறையை பின்பற்றுவதன் மூலம் ஓரளவிற்கு அதனை கட்டுப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. எனினும், குறட்டை பிரச்சனை தீவிரமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம் ஆகும்.
நன்றி - Cosmo Health Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.