குறிப்பிட்ட இரவு உணவை தினசரி 48 நாட்களுக்கு சாப்பிடும் போது நமது உடல் எடை குறையும் என மருத்துவர் தீபா அறிவுறுத்துகிறார். இதற்கான கஞ்சியை எப்படி தயாரிப்பது என்றும், அதனால் கிடைக்கும் பலன்களையும் அவர் விளக்கியுள்ளார்.
Advertisment
இரண்டு டேபிள் ஸ்பூன் கேழ்வரகை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, முளைகட்டிய கேழ்வரகை காயவைத்து பொடியாக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் கேரட், ப்ரோக்கொலி, காள்ஃபிளவர், பீன்ஸ், கொத்தமல்லி ஆகியவற்றை நமக்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம்.
இவற்றில் அனைத்து காய்கறிகளையும் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம்மால் முடிந்த அளவு காய்கறிகளை எடுத்துக் கொள்லலாம். இத்துடன் சிறிதளவு பட்டாணியை சேர்த்துக் கொள்ளலாம். இவை அனைத்தையும் அடுப்பில் வைத்து காய்க்க வேண்டும்.
இவற்றை காய்க்கும் போது தேவையான அளவு உப்பு, மிளகு தூள், சீரகத்தூள் அனைத்தையும் சேர்த்து கலக்க வேண்டும். இவற்றுடன் தேவைப்பட்டால் ஒரு டீஸ்பூன் கொள்ளு சேர்த்துக் கொள்ளலாம். கொள்ளு உடலுக்கு ஒத்துக் கொள்ளாதவர்கள் தவிர்த்து விடலாம்.
Advertisment
Advertisement
இந்தக் கஞ்சியை தினசரி இரவு உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, சுமார் இரவு 7 முதல் 8 மணிக்குள் இதை சாப்பிட்டு விட்டு, 9 மணிக்கு தூங்கி விடுவது உடலுக்கு நல்லது என மருத்துவர் தீபா கூறுகிறார். இதனை குடிப்பதற்கு முன்பாக மாலை நேரத்தில் சற்று நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.
இவ்வாறு தொடர்ச்சியாக 48 நாட்களுக்கு குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் குறைந்து, எடை குறையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி: Sadhguru sai creations Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.