ரெகுலரா பிரட்... கர்ப்பிணிகளுக்கு இந்த ஆபத்து: டாக்டர் தீப்தி
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தொடர்ச்சியாக பிரட் சாப்பிடுவதால் என்ன வகையான பாதிப்புகள் ஏற்படும் என்று மருத்துவர் தீப்தி குறிப்பிட்டுள்ளார். அதற்கான விளக்கத்தை இதில் பார்க்கலாம்.
பெரும்பாலானவர்களுக்கு பிரட் சாப்பிடுவதற்கு பிடிக்கும். குறிப்பாக, காய்ச்சல் போன்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் போது பிரதானமான உணவாக பிரட்டை கொடுப்பார்கள். எனினும், தொடர்ச்சியாக பிரட் சாப்பிடும் போது அவை என்ன மாதிரியான தாக்கத்தை உண்டு செய்யும் என மருத்துவர் தீப்தி தெரிவித்துள்ளார்.
Advertisment
பிரட்டில் அமிலோபெக்டின் ஏ என்ற வேதிப்பொருள் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. இவை கர்ப்பணிகளிடையே சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்று மருத்துவர் தீப்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த சமயத்தில் உணவு பழக்கம் சீராக அமையாமல், சரியான உடற்பயிற்சி மேற்கொள்ளவில்லை என்றால் அவை சர்க்கரை நோயாக மாறும் வாய்ப்பு இருக்கிறது.
இதன் காரணமாக பெண்களின் உடல் எடை அதிகரிக்கும். அப்போது, கருவில் இருக்கும் குழந்தையும் பெரிதாக வாய்ப்பு இருக்கிறது. இதனால் தலை சீராக இறங்குவதில் சிக்கல் ஏற்படும் என்று மருத்துவர் தீப்தி கூறுகிறார். அப்போத, சிசேரியன் செய்து குழந்தையை பிரசவிக்க வேண்டிய சூழல் உருவாகக் கூடும்.
சாதாரணமாக வாங்கும் பிரட்டில் ஊட்டச்சத்துகள் கிடைப்பதில்லை. அதில் நார்ச்சத்து இல்லாததால் செரிமானத்திற்கு அதிக தண்ணீர் அருந்த வேண்டி இருக்கும். ஆனால், தண்ணீர் சரியாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால் மலச்சிக்கல் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், பிரட்டில் அதிகபட்சமாக கார்போஹைட்ரேட் இருக்கிறது.
Advertisment
Advertisements
இதன் காரணமாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பிரட் சாப்பிடக் கூடாது என்று மருத்துவர் தீப்தி அறிவுறுத்துகிறார். சாதம் அல்லது சப்பாத்தி போன்ற உணவுக்கு மாற்றாக பிரட்டை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - Dr.Deepthi Jammi Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.