உடல் உறவின் போது பெண்களுக்கு எதனால் அதீத வலி ஏற்படுகிறது என்பது குறித்து மருத்துவர் தீப்தி விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, பெண்களுக்கு ஏற்படும் இந்த பிரச்சனையை Vaginismus எனக் கூறுவார்கள். பெண்களின் பிறப்புறுப்பின் தசைகள் இறுக்கமாகும் போது, உடலுறவில் இவ்வாறு வலி ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
மன அழுத்தம், சிறு வயதில் ஏற்பட்ட பாதிப்புகள், பயம், உடலுறவு குறித்து போதிய புரிதல் இல்லாத காரணங்களால் இது போன்ற பிரச்சனை ஏற்படும் என மருத்துவர் தீப்தி தெரிவித்துள்ளார். இவற்றை தடுப்பதற்கு சில வழிமுறைகளை பின்பற்றலாம் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
சில உடற்பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் இதனை தடுக்க முடியும். அந்த வகையில் பெல்விக் தசைகளை சுமார் 15 முதல் 20 விநாடிகள் இறுக்கமாக வைத்து, பின்னர் அவற்றை சாதாரண நிலைக்கு கொண்டு வரலாம். ஒரு நாளைக்கு இவ்வாறும் 15 முதல் 20 முறை செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், ஒரு நாளில் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிடங்கள் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இவை உடலின் தசை இயக்கவியலுக்கு சிறந்த உடற்பயிற்சியாக அமைவது மட்டுமின்றி, மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Advertisment
Advertisement
எனினும், இந்த பிரச்சனை தீவிரமாக இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம் என தீப்தி கூறுகிறார். அப்போது, vaginal dilators, tampon போன்றவற்றை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.