Advertisment

நீங்கள் பயன்படுத்தும் ஃபேஸ் வாஷில் ’Beads’ உள்ளதா? தோல் நிபுணர் என்ன சொல்கிறார் தெரியுமா?

எனது அழகு நிபுணர் என்னிடம், முகத்தில், ‘என்ன வகையான ஃபேஸ் வாஷ் பயன்படுத்துகிறீர்கள்?’ என்று கேட்டார்.

author-image
WebDesk
New Update
Beauty tips

does the face wash you use have ‘Beads’?

சமீபத்தில் பெண் ஒருவர் சோஷியல் மீடியாவில், ஃபேஷியல் போது, தனது சருமத் துளைகளில் இருந்து பெட்ஸை (beads) கண்டுபிடித்து அகற்றிய பிறகு, குறிப்பிட்ட ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவதை நிறுத்துமாறு மக்களை வலியுறுத்தினார்.

Advertisment

வீடியோவில், எம்மா கின்ஸ்லி தனது அனுபவத்தை விவரித்து பகிர்ந்து கொண்டார், “நண்பர்களே, நான் ஃபேஷியல் செய்து கொண்டேன். எனது அழகு நிபுணர் என்னிடம், முகத்தில், ‘என்ன வகையான ஃபேஸ் வாஷ் பயன்படுத்துகிறீர்கள்?’ என்று கேட்டார்.

நான், எனது வழக்கமான பொருட்கள் தீர்ந்துவிட்டன, அதனால் நான் வேறு ஃபேஸ் வாஷ் பயன்படுத்துகிறேன் என்றேன்.

அவர், ‘அதில் ஆரஞ்சு அல்லது சிவப்பு மணிகள் (beads) உள்ளதா?’ என கேட்டார். நான், ‘ஆமாம், இருக்கிறது என்றேன். அப்போதுதான் அழகியல் நிபுணர் ’எம்மாவிடம் தனது துளைகளில், ஃபேஸ் வாஷின் பெட்ஸை கண்டுபிடித்ததாக தெரிவித்தார்.

என் முகத்தில் பெட்ஸ் ஒட்டிக்கொண்டன. அவர் பல பெட்ஸை வெளியே எடுத்தார். எனவே நீங்கள் பெட்ஸ் உள்ள பேஸ் வாஷ் அல்லது பேஸ் ஸ்க்ரப்  பயன்படுத்தினால்..... நிறுத்துங்கள்... இப்போது நான் மிகவும் நன்றாக உணர்கிறேன் என்று கூறினார்.

டெல்லி ஸ்கின் சென்டரின் தோல் மருத்துவரும், நிறுவனருமான டாக்டர் மேக்னா குப்தா இதைப் பற்றி பேசுகையில், “சிலிகான் போன்ற சில பொருட்கள், சரியாக சுத்தம் செய்யப்படாவிட்டால், முகத்தில் தங்கி, துளைகளை அடைத்துவிடும்,” என்றார்.

உங்கள் சருமத்துக்கு "எப்போதும் காமெடோஜெனிக் அல்லாத தோல் பராமரிப்பு தயாரிப்புகளைத் தேர்வு செய்ய அவர் பரிந்துரைத்தார். மேலும் ஒவ்வொருவரும் தங்கள் தோல் பராமரிப்புப் பொருட்களில் பின்வரும் பொருட்களைத் தவிர்க்குமாறு நிபுணர் கேட்டுக் கொண்டார்.

* சிலிகான்

*கார்சினோஜெனிக் ப்ரொஃபைல்

*காமெடோஜெனிக் பொருட்கள்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment