சோப்பு நுரை மாதிரி சிறுநீர்; முதல் அபாய அறிகுறி இதுதாங்க..! டாக்டர் அகிலா
சிறுநீரகத்தில் பாதிப்பு இருந்தால் அவை என்னென்ன அறிகுறிகள் மூலம் தெரிய வரும் என்பது குறித்து மருத்துவர் அகிலா தெரிவித்துள்ளார். இந்த அறிகுறிகளை கொண்டு சிறுநீரக பாதிப்பை அறிந்து கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுநீரக பாதிப்புகளை கண்டறிவது இன்றளவும் சிரமமாக இருப்பதாக மருத்துவர் அகிலா தெரிவித்துள்ளார். சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு அதிகமாக சிறுநீர் வெளியேறுதல், கண் பிரச்சனை இருப்பவர்களுக்கு பார்வை குறைபாடு போல சிறுநீரக பிரச்சனைகளை எளிதாக கண்டறிவது சிரமம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
இதைக் கண்டறிவதற்கு முதல் அறிகுறியாக இருப்பது, சிறுநீர் நுரையாக வெளியேறுவது தான் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, சிறுநீர் எந்த மாதிரியாக வெளியேறுகிறது என்று கவனிப்பது அவசியம் என அவர் அறிவுறுத்துகிறார். உடலில் இருக்கும் புரதம் சிறுநீரில் இவ்வாறு வெளியேறுவதால் நுரையாக இருப்பதாக கூறப்படுகிறது.
உடலில் புரதம் குறையும் போது இரத்த குழாய்களில் இருந்து நீர் வெளியேறும். இதனால் கால் வீக்கம் ஏற்படும். இதேபோல், தூங்கி எழும்போது முகத்தில் வீக்கம் இருந்தாலும் சிறுநீரக பிரச்சனையாக இருக்க வாய்ப்பிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அடிக்கடி சோர்வாக உணருதலும் சிறுநீரக பிரச்சனைக்கான அறிகுறியாக இருக்கலாம். கடின வேலை பார்த்த அன்று உடல் சோர்வு இருந்தால் கவலைப்பட வேண்டிய தேவையில்லை. ஆனால், தொடர்ச்சியாக சோர்வு இருந்தால் பரிசோதனை செய்து கொள்வது நல்லது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Advertisement
பசியின்மை, வாந்தி வரும் உணர்வு, சருமத்தில் அரிப்பு மற்றும் வறட்சிதன்மை ஆகியவையும் சிறுநீரக பிரச்சனைக்கு அறிகுறியாக இருக்கக் கூடும். இதேபோல், தண்ணீர் குடிக்கும் அளவை விட அதிகமாக சிறுநீர் வெளியேறுவதும் ஆரம்ப நிலை சிறுநீரக பாதிப்பாக இருக்கலாம் என மருத்துவர் அகிலா தெரிவித்துள்ளார்.
சிறுநீர் மஞ்சள் நிறமாக அல்லது இரத்தம் கலந்து சென்றால் சிறுநீரக கல் போன்றவற்றுக்கு வழிவகுக்கலாம். எனவே, சிறுநீரின் நிறம் எப்படி இருக்கிறது என்பதை கண்காணிக்க வேண்டும். சிறுநீரகத்தை சுற்றிலும் தொற்று ஏற்பட்டால் அல்லது சிறுநீரக கல் இருந்தால் வயிற்று வலி ஏற்படும்.
இது போன்ற தொல்லைகளை தொடர்ச்சியாக சந்திப்பவர்கள் சிறுநீரக பிரச்சனை இருக்கிறதா என்று பரிசோதித்து பார்ப்பது நல்லது என மருத்துவர் அகிலா அறிவுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.