100 நாட்கள் வெறும் வயிற்றில் இந்த சாறு... குறட்டைக்கு நிரந்தர தீர்வு சொல்லும் டாக்டர் கௌதமன்!
குறட்டை பிரச்சனைக்கு எளிமையான முறையில் வீட்டு வைத்தியத்தின் மூலமாக தீர்வு காண முடியும் என மருத்துவர் கௌதமன் தெரிவித்துள்ளார். இந்த மருந்தை தொடர்ந்து 100 நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிம்மதியான உறக்கம் என்பது அனைவருக்கும் இன்றி அமையாதது. அந்த வகையில் நமக்கு அருகே இருப்பவர்களின் நிம்மதியான உறக்கமும் நமது கரங்களில் தான் இருக்கிறது. குறட்டை பிரச்சனை இருப்பவரின் அருகில் இருப்பவர்களுக்கு சரியான உறக்கம் கிடைப்பதில்லை. அந்த வகையில் குறட்டை நோயை வீட்டு வைத்தியம் வாயிலாக தீர்ப்பதற்கான வழிமுறையை மருத்துவர் கௌதமன் தெரிவித்துள்ளார்.
Advertisment
ஒரு வீட்டின் படுக்கையறையில், ஒருவருக்கு மேற்பட்ட நபர்களை தூங்க விடாமல் துரத்தி அடிப்பதில் குறட்டை நோய் முக்கிய பங்கு வகிப்பதாக மருத்துவர் கௌதமன் தெரிவித்துள்ளார். குறட்டை பிரச்சனைக்காக விவாகரத்து கோரி எத்தனையோ தம்பதிகள் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறட்டை என்பது குணப்படுத்த முடியாத நோய் இல்லை என மருத்துவர் கௌதமன் கூறுகிறார். 100 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி லிட்டர் வல்லாரை சாறுடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும் என மருத்துவர் கௌதமன் அறிவுறுத்துகிறார்.
ஒருவேளை கணவருக்கு இந்த பிரச்சனை இருந்தால், மருந்தை மனைவி தயாரித்து கொடுக்க வேண்டும் எனவும், மனைவிக்கு இந்த பிரச்சனை இருந்தால், மருந்தை கணவன் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்றும் மருத்துவர் கௌதமன் பரிந்துரைக்கிறார்.
Advertisment
Advertisement
இந்த மருந்தை 100 நாட்களுக்கு தொடர்ந்து கொடுத்து வந்தால், குறட்டை பிரச்சனை முற்றிலும் குணமாகி விடும் என மருத்துவர் கௌதமன் உறுதியாக தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.