20 - 30 வயதிலேயே அடிக்கடி மறதி? 'விட்டமின் டி' குறைபாடு காரணமாக இருக்கலாம்: டாக்டர் கவுதமி

20 முதல் 30 வயதில் இருக்கும் சிலருக்கு அதிகமான மறதி இருக்கக் கூடும். இப்படி சிறுவவதிலேயே மறதி பிரச்சனை இருப்பதற்கு மூன்று காரணங்கள் இருக்கும் என மருத்துவர் கவுதமி குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Doctor Gowthami

குறிப்பிட்ட வயதுக்கு மேல் செல்லும் போது பலருக்கு நியாபக மறதி ஏற்படுவது இயல்பு தான். ஆனால், தற்போதைய சூழலில் இளம் வயதிலேயே மறதி உருவாகிறது. இதற்கான காரணங்கள் குறித்து மருத்துவர் கவுதமி விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

அதன்படி, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை தான் இதற்கு முதல் காரணமாக விளங்குகிறது என அவர் தெரிவித்துள்ளார். டிப்ரேஷன், சரியான உறக்கம் இல்லாமல் இருத்தல், அடிக்கடி பதற்றமாக உணருவதன் மூலம் நம்மால் சரியாக கவனம் செலுத்த முடியாது. அந்த வகையில் நம் மனதில் பதிவாகாத விஷயத்தை நம்மால் நியாபகத்திற்கு கொண்டு வர முடியாது.

இதேபோல், ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாகவும் நியாபக மறதி ஏற்படலாம் என மருத்துவர் கவுதமி குறிப்பிட்டுள்ளார். வைட்டமின் டி, பி12, ஃபோலேட் குறைபாடுகள் இருந்தாலும் மறதி பிரச்சனை அதிகமாக இருக்கும். இவை மட்டுமின்றி, இரத்த சோகை, தைராயிட் பிரச்சனை இருந்தாலும் நியாபக மறதி ஏற்படும். 

எனவே, சமீபத்திய நாட்களில் அதிகமாக நியாபக மறதி ஏற்படுகிறது என்றால், இந்த மூன்று விஷயங்களையும் அவசியம் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர் கவுதமி அறிவுறுத்துகிறார். பெரும்பாலும், இளவயதில் மறதி பிரச்சனை இருப்பதற்கு இவை காரணமாக அமையக் கூடும்.

Advertisment
Advertisements

எனவே, கூடுமானவரை மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டு சீரான உறக்கத்தை கடைபிடிக்க வேண்டும். இவை தவிர வைட்டமின் குறைபாடுகள் இருந்தால் அதற்கேற்ற உணவு பொருட்களை எடுத்துக் கொள்ளலாம். உணவில் போதிய சத்துகளை எடுத்துக் கொள்ள முடியாவிட்டால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம் என வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Importance of vitamin d for your health Get to know the signs of vitamin d deficiency

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: