ஐஸ் வாட்டர் ஃபேஷியல்… முக சுருக்கங்கள் மறைய இந்த நேரத்தில் பண்ணுங்க; டாக்டர் ஜெயரூபா

காலை எழுந்தவுடன் ஐஸ் கட்டிகள் போட்ட தண்ணீரில் முகத்தை அப்படியே நனைக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும். இதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் இதனை யார் செய்யக் கூடாது என்று மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார்.

காலை எழுந்தவுடன் ஐஸ் கட்டிகள் போட்ட தண்ணீரில் முகத்தை அப்படியே நனைக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும். இதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் இதனை யார் செய்யக் கூடாது என்று மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Ice water facial

ஏராளமான சினிமா பிரபலங்கள், காலை எழுந்ததும் தங்கள் முகத்தை ஐஸ் வாட்டரில் மூழ்க வைப்பதை நாம் பார்த்திருப்போம். இவ்வாறு செய்வது உண்மையிலேயே நம்முடைய முகத்திற்கு பலன் அளிக்குமா என்றும், இதனை யாரெல்லாம் பின்பற்றலாம் என்று மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார்.

Advertisment

காலை விழித்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் இருக்கும். இந்த வீக்கத்தை குறைப்பதற்கு, ஐஸ் கட்டிகள் போட்ட தண்ணீரில் நமது முகத்தை 30 வினாடிகளுக்கு வைத்து எடுக்கலாம் என்று மருத்துவர் ஜெயரூபா அறிவுறுத்துகிறார். 

மேலும், சிலரது முகத்தில் இருக்கும் பருக்களின் காரணமாக வீக்கம் இருக்கும். இந்த வீக்கத்தை குறைக்கவும் ஐஸ் கட்டிகள் போட்ட தண்ணீரில் முகத்தை நனைத்து எடுக்கலாம். பருக்களின் காரணமாக முகம் சிவந்து இருந்தாலும், இப்படி செய்வதன் மூலம் சரியாகும்.

இது தவிர சிலரின் முகத்தில் எப்போதுமே எண்ணெய்ப் பசை அதிகமாக இருக்கும். அப்படி இருப்பவர்கள், தங்கள் முகத்தை ஐஸ் கட்டிகள் போட்ட தண்ணீரில் நனைக்கலாம். இது மட்டுமின்றி பதற்றம் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த முறையை பின்பற்றலாம். இது பதற்றத்தை குறைக்க உதவும்.

Advertisment
Advertisements

எனினும், இந்த முறையை சருமம் வறட்சியாக இருப்பவர்கள் செய்ய வேண்டாம் என்று மருத்துவர் ஜெயரூபா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்தப் பயிற்சியை காலை நேரத்தில் 30 வினாடிகளுக்கு மூன்று அல்லது நான்கு முறை மட்டுமே செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஐஸ் வாட்டர் ஃபேஷியல் செய்யும் போது சில நன்மைகள் கிடைத்தாலும், இதனை பின்பற்றுவதற்கு முன்பாக மருத்துவர்களின் ஆலோசனையை பெறுவது, தேவையற்ற சிக்கல்களை தடுக்க உதவும்.

நன்றி - SHREEVARMA  Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Skin Care

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: