கொரியன் ப்யூட்டி பொருட்களில் இந்த கீரை தான் இருக்கு; வயதான தோற்றத்தை தடுக்க இப்படி யூஸ் பண்ணுங்க; டாக்டர் ஜெயரூபா
பெண்களுக்கு எப்போதும் தங்கள் அழகு மீது ஒரு அக்கறை இருக்கும். அப்படி இருக்கையில் கொரியன் பியூட்டி பொருட்களில் உள்ள சீக்ரெட் பற்றி டாக்டர் ஜெயரூபா கூறுகிறார்.
பெண்களுக்கு எப்போதும் தங்கள் அழகு மீது ஒரு அக்கறை இருக்கும். அப்படி இருக்கையில் கொரியன் பியூட்டி பொருட்களில் உள்ள சீக்ரெட் பற்றி டாக்டர் ஜெயரூபா கூறுகிறார்.
பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், குறிப்பாக 30 வயதிற்கு மேல், சருமத்தில் பல மாற்றங்களை உருவாக்குகின்றன. கர்ப்ப காலத்தில் சருமம் பொலிவாக இருந்தாலும், இந்த வயதில் சரும வறட்சி, கருந்திட்டுகள், முகப்பருக்கள், சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றம் போன்றவை தோன்றலாம். சில பெண்களுக்கு நெற்றி மற்றும் மூக்கு பகுதிகளில் அதிக எண்ணெய் சுரப்பு இருக்கும், மற்ற இடங்களில் வறட்சி காணப்படும்.
Advertisment
ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக வாய் மற்றும் மூக்குக்கு கீழ் கட்டிகள் அல்லது கருந்திட்டுகள் உருவாகலாம். இவை தன்னம்பிக்கையை குறைக்கக்கூடும். இந்தச் சிக்கல்களைச் சரிசெய்து, முகத்தைப் பொலிவாகவும், நீரேற்றத்துடனும் வைத்திருக்க, ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் மருத்துவர் ஜெயரூபா கூறியிருப்பதை பற்றி பார்க்கலாம்.
30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு முகத்தில் சுருக்கங்கள், கட்டிகள், கருந்திட்டுகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் பற்றியும் கூறியுள்ளார். அவற்றில் முக்கியமான சிலவற்றை பற்றி பார்க்கலாம்.
ஹார்மோன் சமநிலையின்மை: உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் சருமத்தைப் பாதிக்கின்றன.
Advertisment
Advertisements
வறட்சி: சரும வறட்சி வயதான தோற்றத்தை விரைவுபடுத்துகிறது.
வாழ்வியல் முறைகள் மற்றும் உணவு: முறையற்ற உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் முறைகள் ரத்தத்தில் கழிவுகள் சேர வழிவகுத்து, ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் சருமப் பிரச்சனைகளை உருவாக்குகின்றன.
இதனை சரிசெய்ய வல்லாரை கீரை உதவுகிறது. வல்லாரை வயதான தோற்றத்தையும், சுருக்கங்களையும் குறைக்க கொரியன் பியூட்டி தயாரிப்புகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. வல்லாரையை நெய்யுடன் சேர்த்து காய்ச்சி, அந்த நெய்யை காலையில் வெறும் வயிற்றில் கால் டீஸ்பூன் அளவுக்கு உருக்கி எடுத்துக் கொள்ளலாம். இது முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்க உதவும். வல்லாரையை நன்கு அரைத்து பாலுடன் கலந்து முகத்தில் தடவி வந்தால், சருமம் இறுக்கமாக மாறும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.