தோலில் கருநிறத் தழும்புகள் தோன்றுவது இதனால் தான்… வீட்டு தோட்டத்தில் இருக்கு எளிய தீர்வு; டாக்டர் ஜெயரூபா

கருநிறத் தழும்புகள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், வீட்டில் உள்ள ஒரு எளிய பொருள் மூலம் இந்த தழும்புகளை குறைக்க முடியும் என்று டாக்டர் ஜெயரூபா கூறுகிறார்.

கருநிறத் தழும்புகள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், வீட்டில் உள்ள ஒரு எளிய பொருள் மூலம் இந்த தழும்புகளை குறைக்க முடியும் என்று டாக்டர் ஜெயரூபா கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
skin care

இளம்வயதில் தோலில் கருப்புநிற பிம்பிள்கள், சிறிய உயர்வுகள் போன்று தோற்றமளிக்கின்றனவா? இது ‘Keratosis Pilaris’ எனப்படும் தோல் குறைபாடாக இருக்கலாம். இது உங்கள் உடலில் உள்ள வாத பிணி, குடல் சுத்தம் இல்லாத நிலை, முடிவில்லா கெரட்டின் உற்பத்தி, மற்றும் வைட்டமின் குறைபாடுகள் ஆகியவற்றால் ஏற்படலாம். தோல் அழகையும், உடல் சுகாதாரத்தையும் மேம்படுத்த சிறு பழக்கங்களை மாற்றினால் போதுமானது என்று டாக்டர் ஜெயரூபா ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.

Advertisment

Keratosis Pilaris என்பது தோலில் சிறிய, கடினமான புள்ளிகள் அல்லது திட்டுகள் தோன்றுவதால் ஏற்படும் ஒரு பொதுவான தோல் நிலை. இது பார்ப்பதற்கு "கோழி தோல்" அல்லது "வாழைப்பழத் தோல்" போல இருக்கும். இந்த நிலைக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. முக்கியமாக, தோலில் கெரட்டின் என்னும் புரதம் அதிக அளவில் உற்பத்தி ஆவதால் தோலின் மயிர்க்கால்கள் அடைபட்டு இந்தத் திட்டுகள் உருவாகின்றன.

வைட்டமின் ஏ, டி, ஈ, கே போன்ற சத்துக்களின் குறைபாடு உள்ளவர்களுக்கும் Keratosis Pilaris பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், தைராய்டு பிரச்சினைகள், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOD), மற்றும் வறண்ட அல்லது எண்ணெய் பசையுள்ள சருமம் உடையவர்களும் இதனால் பாதிக்கப்படலாம். நாம் பயன்படுத்தும் சில ஷாம்புகள், சோப்புகள் அல்லது அழகு சாதனப் பொருட்களும் இந்த நிலையைத் தூண்டக்கூடும்.

நீரிழிவு நோய், உளவியல் அழுத்தம் மற்றும் போதுமான தூக்கமின்மை போன்ற காரணிகளும் Keratosis Pilaris ஏற்படுவதற்கு மறைமுகமாக பங்களிக்கலாம். இறுதியாக, உடலில் குடல் சுத்தமில்லாமல் இருப்பது கூட இந்த தோல் பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisment
Advertisements

Keratosis Pilaris பாதித்த சருமத்தை சீராக்க சில எளிய வழிமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. முதலாவதாக, தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் நெய் உட்கொள்வது நல்ல கொழுப்புச்சத்துக்களை உடலில் உருவாக்க உதவும். 

குப்பைமேனி இலையையும் மஞ்சளையும் சேர்த்து அரைத்து, மோரில் கலந்து முகத்தில் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி 30 நிமிடம் ஊறவிடவும். பின்னர் நலங்கு மாவு சேர்த்து குளிப்பது சருமத்திற்கு நன்மை பயக்கும். வாரத்திற்கு ஒருமுறை குடல் சுத்திகரிப்பு (டிடாக்ஸ்) மேற்கொள்வது, மூலிகை காஷாயம் அல்லது கஞ்சி போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

உணவில் வைட்டமின் ஏ, டி, ஈ, கே நிறைந்த முட்டை, நெய் மற்றும் மீன் போன்றவற்றை சேர்த்துக்கொள்வது இந்த சத்துக்களின் குறைபாட்டை நிவர்த்திக்கும். மேலும், தினமும் நறுக்கிய கொட்டைகள் மற்றும் நெய் சேர்த்து உட்கொள்வதும் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் Keratosis Pilaris பாதிப்பைக் குறைக்கவும், சருமத்தை மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியும்.

Keratosis Pilaris ஏற்பட காரணங்கள்:

 கெரட்டின் அதிக உற்பத்தி – தோலில் சிறிய திட்டுக்கள்
 வைட்டமின் A, D, E, K குறைபாடு
 தையராய்டு, PCOD, Dry/Oily Skin உள்ளவர்கள் பாதிக்கப்படலாம்
 சாம்பூ, சோப்புகள் அல்லது காஸ்மெட்டிக்ஸ் பயன்பாடு
 நீரிழிவு, உளவியல் அழுத்தம், தூக்கமின்மை
 குடல் சுத்தம் இல்லாத நிலை

சருமத்தை சீராக்கும் வழிமுறைகள்:

காலை வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் நெய் – நல்ல கொழுப்புச்சத்துகளை உருவாக்க செய்திடும்.

குப்பைமேனி + மஞ்சள் – மஞ்சள் தூளுடன் அரைத்து மோரில் கலக்கி முகத்தில் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதியில் 30 நிமிடம் தடவி ஊறவிடவும். பின்னர் நலங்கு மாவு சேர்த்து குளிக்கவும். 

வாரத்திற்கு ஒருமுறை குடல் டிடாக்ஸ் (மூலிகை காஷாயம் அல்லது கஞ்சி)

வைட்டமின் A, D, E, K பெறும் உணவுகள் – முட்டை, நெய், மீன்

தினமும் நறுக்கப்பட்ட உண்டிகள் (nuts), நெய் சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.

Skin Care

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: