20 - 30 வயதில் வயகரா எடுக்கலாமா? விளக்கும் டாக்டர் கார்த்திக் குணசேகரன்
20 முதல் 30 வயதில் இருப்பவர்கள் வயகரா மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாமா அல்லது வேண்டாமா என்று மருத்துவர் கார்த்திக் குணசேகரன் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
20 முதல் 30 வயதில் இருப்பவர்கள் வயகரா மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாமா அல்லது வேண்டாமா என்று மருத்துவர் கார்த்திக் குணசேகரன் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வயகாரா மாத்திரைகளின் தன்மை குறித்து இன்றைய சூழலில் பலரும் அறிந்திருப்பார்கள். உடல் உறவில் ஈடுபடும் போது ஆண்களின் விறைப்புத் தன்மையை சீராக வைத்திருக்க இது போன்ற மாத்திரைகள் உதவுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Advertisment
ஆனால், எந்த வயதில் இருப்பவர்கள் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற சந்தேகம் நிறைய ஆண்களுக்கு இருக்கும். அந்த வகையில், வயகரா மாத்திரைகளை யாரெல்லாம், எதற்காக எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் கார்த்திக் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
சாதாரணமாக 20 முதல் 30 வயதில் இருப்பவர்கள் வயகரா மாத்திரைகளை எடுக்க வேண்டாம் என்று தான் அறிவுறுத்துவதாக மருத்துவர் கார்த்திக் குணசேகரன் குறிப்பிட்டுள்ளார். சில சமயங்களில் மலட்டுத் தன்மை அல்லது குழந்தையின்மை பிரச்சனை இருப்பவர்களை, ஓவியூலேஷன் நேரத்தில் உடல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துவார்கள்.
அது போன்ற நேரத்தில் நிறைய ஆண்களுக்கு பதற்றமாக இருக்கும் என்று மருத்துவர் கார்த்திக் குணசேகரன் கூறுகிறார். அந்த சூழலில் அனைத்து ஆண்களாலும் விறைப்புத் தன்மையை சீராக பராமரிக்க முடியாது. அத்தகைய நேரத்தில் மட்டும் குறைவான அளவு கொண்ட வயகரா மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம் என அவர் அறிவுறுத்துகிறார்.
Advertisment
Advertisements
இது தவிர எக்காரணம் கொண்டும் 20 முதல் 30 வயதில் இருப்பவர்கள் வயகரா மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என மருத்துவர் கார்த்திக் குணசேகரன் தெரிவித்துள்ளார். இதையும் மீறி எடுத்துக் கொண்டால், அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகும் வாய்ப்பு இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுக்கிறார்.
நன்றி - ஆண்களுக்காக - Dr. Karthik Gunasekaran Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.