ஆண்குறியில் வீக்கம்... சாதாரணமா எடுத்துக்காதீங்க: நிரந்தர தீர்வு சொல்லும் டாக்டர் கார்த்திகேயன்
ஆண்களுக்கு ஏற்படக் கூடிய ஒரு பாதிப்பு குறித்து மருத்துவர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அந்தப் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆண்களுக்கு ஏற்படக் கூடிய ஒரு பாதிப்பு குறித்து மருத்துவர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அந்தப் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.
பெண்களின் உடல் சார்ந்த பிரச்சனைகள் குறித்து சக பெண்களிடம் அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், ஆண்களின் பிரச்சனைகளை சக ஆண்களிடமோ அல்லது நண்பர்களிடமோ கூட பலரும் பகிர்ந்து கொள்வதில்லை.
Advertisment
குறிப்பாக, ஆண்களின் பிறப்புறுப்பு குறித்தும், அதில் ஏற்படும் சில பாதிப்புகள் குறித்தும் வெளியே சொல்வதற்கு அதிகமாக தயங்குகின்றனர். இதன் காரணமாக பல்வேறு வகைகளில் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
அதில் மிக முக்கியமான பிரச்சனையாக ஆண்குறி வீக்கம் பார்க்கப்படுகிறது. சில ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியில் முன்பகுதி தோலை ஓரளவிற்கு மேல் பின்னால் இழுக்க முடியாது. இது மட்டுமின்றி காலை எழுந்ததும், சிறுநீர் கழிக்க முடியாத அளவிற்கு சிலரது ஆண்குறி வீங்கி இருக்கும். இதற்கான காரணம் மற்றும் தீர்வு குறித்து மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சனைக்கு பெயர் பராஃபைமோசிஸ் என்று மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார். இவ்வாறு முன் தோலை பின்புறமாக சீராக இழுக்க முடியாமல் இருந்தால், சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சனை ஏற்படும். மேலும், முன் தோலை இயல்பு நிலைக்கு சரியாக கொண்டு வர முடியவில்லை என்றாலும் சிறுநீரை வெளியேற்ற முடியாமல் பிரச்சனை உருவாகும்.
Advertisment
Advertisements
அந்த வகையில், அறுவை சிகிச்சை மூலமாக ஆண்குறியின் முன் தோலை நீக்கி விட்டால் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்று மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்துகிறார். இது மட்டுமின்றி, ஆண்குறியை தினமும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நன்றி - Doctor Karthikeyan Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.