தேங்காய் எண்ணெய்யில் இந்த இலைகளை 7 நாட்கள் ஊறவைத்து பாருங்க… இயற்கையான ஹேர் டை ரெடி; டாக்டர் கார்த்திகேயன்
வெட்பாலை இலையில் இருந்து கிடைக்கக் கூடிய பல்வேறு மருத்துவ குணங்கள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அவற்றை இந்த செய்திக் குறிப்பில் விரிவாக பார்க்கலாம்.
வெட்பாலை இலையில் இருந்து கிடைக்கக் கூடிய பல்வேறு மருத்துவ குணங்கள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அவற்றை இந்த செய்திக் குறிப்பில் விரிவாக பார்க்கலாம்.
சென்னப்பட்டினம் பொம்மைகள் குறித்து பலருக்கும் தெரிந்திருக்கும். இந்த அழகிய பொம்மைகள் தயாரிப்பதற்கு வெட்பாலை மரம் தான் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. பொம்மை தயாரிப்பு மட்டும் இல்லாமல், இந்த மரத்துக்கு நிறைய மருத்துவ குணங்களும் இருக்கிறது என்று மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார்.
Advertisment
தமிழ்நாட்டை பொறுத்தவரை, இந்த மரங்கள் குற்றாலம், பழனி ஆகிய இடங்களில் காணப்படுகிறது. வெட்பாலை இலைகள் சரும பிரச்சனைகளுக்கு மருந்தாக செயல்படுகிறது. மேலும், மன அழுத்தம் சார்ந்த மூளை பிரச்சனைகளை குணப்படுத்தவும் இவை உதவுகிறது என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இந்த இலைகளை கசக்கும் போது கருப்பு நிறமாக மாறி எண்ணெய் வெளியாகும். அந்த வகையில் ஹேர் டை-க்கு இயற்கையான மாற்றாக இந்த இலைகளை பயன்படுத்தலாம் என்று மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்துகிறார். அதன்படி, வெட்பாலை இலைகளை சிறிய துண்டுகளாக வெட்டி தேங்காய் எண்ணெயில போட்டு 7 நாட்கள் வெயிலில் ஊற வைத்தால் இயற்கையான ஹேர் ஆயில் தயாராகி விடும்.
இது மட்டுமின்றி, வெட்பாலை எண்ணெய்யை சரும பாதிப்புகளுக்கும் மருந்தாக பயன்படுத்தலாம் என்று மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்துகிறார். மேலும், பல் வலி மற்றும் பற்களில் கூச்சம் இருப்பவர்கள், இந்த வெட்பாலை இலைகளை மென்று சாப்பிடுவதன் மூலம் பல் வலி குறையும் என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
வெட்பாலையில் இருந்து அரிசியும் எடுக்கப்படுகிறது. இது செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைக்கவும், கொழுப்புகளை குறைக்கவும் பயன்படுகிறது. வெட்பாலை இலையில் இருக்கும் வேதிப்பொருளுக்கு பூஞ்சை தொற்றுகளை குணமாக்கும் தன்மை இருக்கிறது என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதில் இருக்கும் நன்மைகள் காரணமாக சித்த மருத்துவம் மற்றும் ஆயுர் வேத மருத்துவத்தில் வெட்பாலையை அதிகளவில் பயன்படுத்துவதாக மருத்துவர் கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - Doctor Karthikeyan Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.