தலை முடி ஈரமாக இருந்தால் எளிதாக சளி பிடிக்கும் என பலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம். ஆனால் தலைமுடி ஈரமாக இருப்பதற்கும், சளி பிடிப்பதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்ற குழப்பமும் நமக்கு இருக்கும். இதற்கான விளக்கத்தை மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Advertisment
சளி பிடிக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக வைரஸ் தேவைப்படும் என மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார். அதனால், தலைமுடி ஈரமாக இருப்பதனால் சளி பிடிக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், வைரஸ் என்பது ஈரமான இடத்தை விரும்பக் கூடியது என்று அவர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக ரைனோ வைரஸ் (Rhino Virus) காரணமாக சளி பிடிக்கும் எனக் கூறியுள்ள மருத்துவர் கார்த்திகேயன், இவை காற்றில் பரவும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் நாம் வெளியே செல்லும் போது காற்றில் பரவக் கூடிய இந்த வைரஸ், ஈரமான தலைமுடியில் ஒட்டிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக அவர் கூறுகிறார்.
எனவே, நாம் வீடு திரும்பிய பின்னர் அந்த சூழலில் வைரஸ் பெருகி சளியை உண்டாக்கும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக விளக்கம் அளித்துள்ளார். அதனால், தூங்க செல்வதற்கு முன்பாக தலை முடி நன்றாக காய்ந்து இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும், முடியை சரியான நீளத்திற்கு வெட்டி பராமரிக்கலாம் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.
Advertisment
Advertisement
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.