வெயில் கால தோல் நோய் அக்கி என்பது என்ன? எளிய வீட்டு மருத்துவம் இதுதான்; டாக்டர் கார்த்திகேயன்
அக்கி நோய் ஏற்படுவதற்கான காரணங்களை மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நோயில் இருந்து மீண்டு வருவதற்கான வழிமுறைகள் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அக்கி நோய் ஏற்படுவதற்கான காரணங்களை மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நோயில் இருந்து மீண்டு வருவதற்கான வழிமுறைகள் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அக்கி என்பது ஒரு சரும நோய் ஆகும். இது சிவப்பு நிறத்தில் கடுமையான வலியுடன் வரும். இது பொதுவாக 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வரும். சின்னம்மை நோயை ஏற்படுத்தும் வைரஸ் தான் அக்கியையும் ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் உடலில் பல வருடங்கள் இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது, இந்த வைரஸ் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார்.
Advertisment
அக்கி நோய் பொதுவாக முதுகுப் பகுதியில் அல்லது மார்புக்குக் கீழே ஒரு குறிப்பிட்ட பகுதியில் வரும். இது கொப்புளங்களாக உருவாகும். அக்கி நோய் வரும்போது காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி போன்ற அறிகுறிகளும் இருக்கலாம். அக்கி நோய்க்கு ஆன்டி வைரல் மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதாக மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அது குறையும் வரை மற்றவர்களிடமிருந்து, குறிப்பாக கர்ப்பிணி பெண்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். சின்னம்மை வந்தவர்களுக்கு அக்கி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அக்கி சில நேரங்களில் கண் பார்வை மற்றும் காது கேளாமை போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம். அக்கி பிறப்புறுப்பிலும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இந்த பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்துகிறார். அதன்படி, உணவில் காரம் மற்றும் உப்பு குறைவாக இருக்க வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிட வேண்டும். தயிர் மற்றும் கீரைகள் சாப்பிடலாம். சர்க்கரை பானங்கள் மற்றும் காரமான உணவுகளைத் தவிர்க்கவும். பூண்டு மற்றும் மஞ்சள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. பால் மற்றும் முட்டை போன்ற உணவுகளையும் சாப்பிடலாம்.
Advertisment
Advertisements
ஆயுர்வேதத்தில் இதனை விசர்ப்ப நோய் என்று அழைக்கின்றனர். இதற்காக, ஆயுர்வேதத்தில் ரத்த சுத்திகரிப்பு மற்றும் மூலிகை மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. தாமரை, கருங்குவலை, விளாமிச்சை, பால் மற்றும் நெய் சேர்த்து அக்கி பாதிப்பு இருக்கும் இடங்களின் மேல் பூசலாம். அதிமதுரை கஷாயம் மற்றும் கோரைக்கிழங்கு கஷாயம் போன்றவற்றை மருந்தாக குடிக்கலாம். இது போன்ற விஷயங்களை அக்கி நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்றலாம் என்று மருத்துவர் கார்த்திகேயன் வலியுறுத்துகிறார்.
நன்றி - Doctor Karthikeyan Yotube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.