சுருங்கிய நுரையீரல் குழாய்களை விரிக்கும் இந்தச் செடியின் இலை: ஆதாரங்களை அடுக்கிய டாக்டர் கார்த்திகேயன்
கற்பூர வள்ளி இலைகளின் மருத்துவ பயன்கள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் பல்வேறு தகவல்களை விளக்கியுள்ளார். அவற்றை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
கற்பூர வள்ளி இலைகளை வீட்டு வைத்தியத்தில் அதிகமாக பயன்படுத்தலாம் என மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். தொண்டை வலி, இருமல் போன்ற பாதிப்புகளுக்கு ஆரம்ப கட்டத்தில் இவை நல்ல மருந்தாக செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
கற்பூர வள்ளி இலைகள் குறித்து ஏராளமான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், இவற்றை மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் பெருமளவு பயன்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். கற்பூர வள்ளி இலைகளில் தைமோல் மற்றும் கார்வகோல் ஆகியவை காணப்படுகிறது. இதற்காக தான் மருந்துகள் தயாரிக்க கற்பூர வள்ளி இலைகள் பயன்படுகின்றன.
இவற்றில் பாக்டீரியா தொற்று நோய்களை எதிர்த்து போராடும் ஆற்றல் அதிகமாக இருக்கிறது. மேலும், பூஞ்சை தொற்றுகளை குணப்படுத்தவும் இவை உதவி செய்கின்றன. இதேபோல், வைரஸ் பரவலால் ஏற்படும் பாதிப்புகளை கற்பூர வள்ளி இலைகள் தடுக்கின்றன.
ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல் சுருங்கி விடும். அந்த சூழலில் நுரையீரல் குழாய்களை விரிக்கும் ஆற்றல் இந்த கற்பூர வள்ளி இலைகளுக்கு இருக்கிறது. வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் ஆகிய செரிமான பிரச்சனைகளுக்கு இது மருந்தாக பயன்படுகிறது.
Advertisment
Advertisement
தயிரில் இருக்கும் லக்டோ பசிலஸ் என்ற நல்ல கிருமியை வளரச் செய்யும் ஆற்றல் கற்பூர வள்ளி இலைக்கு இருக்கிறது. அதனால் தான் செரிமான மண்டலத்தின் அனைத்து விதமான பிரச்சனைக்கும் கற்பூர வள்ளி இலைகள் பயன்படுகிறது என மருத்துவர் கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தலைவலி மற்றும் முதுகு வலி போன்ற பாதிப்புகளுக்கு இவை வலி நிவாரணியாக செயலாற்றுகிறது. பூச்சிக் கடிகளில் கூட, இந்த இலையை பிழிந்து தடவினால் அவை குணமாகும் எனக் கூறப்படுகிறது. பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கும் தன்மையும் இதற்கு இருக்கிறது.
இது போன்ற பல்வேறு நன்மைகள் கற்பூர வள்ளி இலையில் இருப்பது ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இவற்றை மருந்தாக பயன்படுத்தும் முறை குறித்து தற்போது காண்போம்.
5 கற்பூர வள்ளி இலைகள், 4 மிளகு ஆகியவற்றை இடித்து அவற்றுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்க்க வேண்டும். இவற்றை நன்றாக கலந்து கொடுத்தால் சளி போன்ற தொல்லைகள் நீங்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.