பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கப்பதாக மருந்துகள் பார்க்கப்படுகின்றன. ஆனால், அவ்வாறு எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளில் இருந்தே சில நேரத்தில் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. அதனடிப்படையில், இரத்த அழுத்தம் மற்றும் கொதிப்புக்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரையினால் ஏற்படும் பக்கவிளைவுகளை மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இரத்த கொதிப்பு பிரச்சனை இருப்பவர்களுக்கு ரமிப்ரில் என்ற மாத்திரை கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த மாத்திரை சாப்பிடுவதால் பலருக்கு இருமல் உருவாகிறது எனக் கூறுவதாக மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த மாத்திரை எடுத்துக் கொண்டால் வறட்டு இருமல் ஏற்படும் என மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இந்த இருமல் தொடர்ச்சியாக வந்தால் மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் மாத்திரையை மாற்றிக் கொள்வது நல்லது என அவர் பரிந்துரைத்துள்ளார்.
ஏனெனில், இருமல் மருந்து எடுத்துக் கொண்டால் கூட இந்த மாத்திரையினால் ஏற்படும் இருமலை குணப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார். மேலும், தலைச்சுற்றல், தலை வலி போன்ற பக்கவிளைவுகளும் இந்த மாத்திரையால் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இது போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் தங்கள் மருத்துவரை உடனடியாக அணுகி ஆலோசனை செய்வது நல்லது என்று கார்த்திகேயன் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.