இந்த பூவை தலைக்கு பக்கத்தில் வைத்து படுத்தால் நல்ல தூக்கம் வரும்… மன அழுத்தம் குறையும்; டாக்டர் கார்த்திகேயன்
மருதாணி பூவில் இருக்கும் பல்வேறு மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அவற்றை இந்த செய்தி குறிப்பில் விரிவாக பார்க்கலாம்.
மருதாணி பூவில் இருக்கும் பல்வேறு மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அவற்றை இந்த செய்தி குறிப்பில் விரிவாக பார்க்கலாம்.
இயற்கையின் படைப்பில் ஒவ்வொரு பொருளிலும் ஏதோ ஒரு நல்ல குணம் மறைந்திருக்கிறது. அதன் நன்மைகளை கண்டறிந்து சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
Advertisment
அந்த வகையில் மருதாணி பூவில் இருக்கும் பல்வேறு நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக, இந்த மருதாணி பூவின் வாசனை இளநீர் போன்று இருக்கும் என்று அவர் கூறுகிறார்.
சொரியாசிஸ், எக்ஸிமா போன்ற சரும நோய்களுக்கு மருதாணி பூக்களை மருந்தாக பயன்படுத்தலாம் என்று மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்துகிறார். அதன்படி, இதனை அரைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைப்பதற்கு மருதாணி பூக்கள் பயன்படுகிறது என்று மருத்துவர் கார்த்திகேயன் கூறியுள்ளார். கூடுதலாக, நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் ஆற்றலும் இந்தப் பூவிற்கு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
மன அழுத்தத்தை நீக்கி நன்றாக தூக்கம் வருவதற்கும் மருதாணி பூக்களை சிலர் பயன்படுத்துகின்றனர் என்று மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார். அதன்படி, இந்தப் பூக்களை தலைக்கு பக்கத்தில் வைத்து தூங்கலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
இது தவிர வீட்டில் சாம்பிராணி போடும் போது, இந்த விதைகளையும் அவற்றுடன் சேர்த்து உபயோகப்படுத்தலாம் என்று மருத்துவர் கார்த்திகேயன் வலியுறுத்துகிறார். ஏனெனில், இதில் இருந்து நல்ல நறுமணம் வீசும்.
நன்றி - Doctor Karthikeyan Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.