தலைமுடியை சரியாக பராமரிப்பது என்பதே இன்றைய தலைமுறையினருக்கு பெரும் பணியாக இருக்கிறது. அதிலும், சுருட்டை முடியாக இருந்தால் அதன் சிரமம் மேலும் அதிகரிக்கும். அதனடிப்படையில் சுருட்டை முடி பராமரிப்பு குறித்தும், அதற்கு தேவையான ஹேர் மாஸ்கை இரசாயனங்கள் சேர்க்காமல் எப்படி தயாரிப்பது என்பது குறித்தும் மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
முட்டையின் மஞ்சள் மற்றும் வெள்ளைக் கருவில் பல விதமான புரதச் சத்துகள் இருக்கின்றன. மேலும், முடிக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்களும் அடங்கி இருக்கின்றன. இந்த முட்டை கொண்டு ஹேர் மாஸ்க் செய்து பயன்படுத்தலாம் என மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
முட்டையின் மஞ்சள் மற்றும் வெள்ளைக் கருவுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டையும் நுரை வரும் அளவிற்கு நன்றாக கலக்க வேண்டும். இப்படி செய்தால் நாம் பயன்படுத்தக் கூடிய ஹேர் மாஸ்க் தயாராகி விடும். முட்டையின் மனம் பிடிக்காதவர்கள், இத்துடன் மிகச் சிறிய அளவில் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
இந்த ஹேர்மாஸ்கை தலையில் தேய்த்து சுமார் 20 நிமிடங்கள் காய வைக்க வேண்டும். அதன் பின்னர், குளிர்ந்த நீரில் சீவக்காய் அல்லது மைல்டான ஷாம்பூ தேய்த்து குளிக்கலாம். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை பின்பற்றி வரலாம் என மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.