கை - கால் வலி, தலைவலி? உங்க வீட்டிலேயே தைலம் ஈசியா இப்படி ரெடி பண்ணுங்க: டாக்டர் கார்த்திகேயன்
உடலில் ஏற்படும் வலிகளுக்கு நிவாரணம் அளிக்கக் கூடிய மூலிகை தைலம் தயாரிப்பது எப்படி என மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அதற்கான விளக்கத்தை இந்த செய்திக் குறிப்பில் காணலாம்.
நொச்சி இலைகளில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். கை, கால், தலைவலிக்கு இந்த நொச்சி இலைகளில் இருந்து தைலம் தயாரித்து பயன்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நம் வீட்டிலேயே நொச்சி இலை தைலம் செய்வது எப்படி என தற்போது பார்க்கலாம்.
Advertisment
முதலில் ஒரு கைப்பிடி அளவு நொச்சி இலைகளை தனியாக எடுத்துக் கொள்ளலாம். இந்த இலைகளை மிக்ஸியில் போட்டு அரைப்பதற்கு முன்னதாக, 100 மில்லி லிட்டர் நல்லெண்ணெய்யை அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும். எண்ணெய் சூடாகும் நேரத்தில் நொச்சி இலைகளை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுக்க வேண்டும்.
அடுப்பில் எண்ணெய் காய்ந்ததும், அதனுள் இந்த நொச்சி இலை பொடியை சேர்த்து கலக்க வேண்டும். இவை நன்றாக கொதித்ததும் அடுப்பை ஆஃப் செய்து விடலாம். அதன் பின்னர் எண்ணெய் ஆறியதும் அதை வடிகட்டி தைலத்தை தனியாக பிரித்து எடுக்க வேண்டும். வடிகட்டிய தைலத்தை வேறு ஒரு பாட்டிலுக்கு மாற்றி விடலாம்.
வழக்கமாக வலி நிவாரண தைலத்தை உடலில் தேய்க்கும் போது அந்த இடம் சூடாக தெரியும். ஆனால், நொச்சி இலை தைலத்தை தேய்த்தால் அந்தப் பகுதி குளிர்ச்சியாக இருக்கும். இந்த குளிர்ச்சியான தன்மை வலியை குறைக்கும் என மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும், சளி பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், நொச்சி இலைகளை சுடுதண்ணீரில் போட்டு ஆவி பிடிக்கலாம் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.
Advertisment
Advertisement
மேலும், இயற்கையான முறையில் இந்த நொச்சி இலை தைலத்தை தயாரித்து பயன்படுத்துவதால் அதில் இருந்து ஒவ்வாமை ஏற்படும் சாத்தியக் கூறுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.