தீபாவளியையொட்டி பலரும் அதிகளவில் இனிப்பு வகைகளை சாப்பிட்டிருப்போம். இதனால் சர்க்கரை அளவு அதிகரித்திருக்குமோ என பலரும் கவலை அடைந்திருப்பார்கள். ஆனால், இயற்கையான 10 வழிமுறைகள் மூலம் சர்க்கரையை குறைக்கும் வழியை மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அதன்படி,
1. தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டுமென மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார். இதன் மூலம் சர்க்கரயை சிறுநீர் மூலம் வெளியேற்ற முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.
2. இனிப்பு சாப்பிட்டு முடித்ததும், அன்றைய இரவு நேரத்திலும் கண்டிப்பாக பல் துலக்க வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார். இதனால், பற்களில் உள்ள குளுக்கோஸை அகற்ற முடியுமென அவர் கூறுகிறார்.
3. புரதம் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும், இதனால் மேலும் பசி உணர்வு தூண்டப்படாமல் இருக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
4. இனிப்பு சாப்பிட்டதும் தூங்கக் கூடாது எனக் கூறிய அவர், நடைபயிற்சி செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.
5. நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து மிகுந்த பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை சாப்பிட வேண்டுமென மருத்துவர் கார்த்திகேயன் பரிந்துரைத்துள்ளார்.
6. இதேபோல், பாதாம் உள்ளிட்ட நட்ஸ் வகைகளை சாப்பிட வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
7. விரைவாக விழாக்கால உணவு முறையில் இருந்து வெளியேற வேண்டுமென மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார்.
8, மேலும், மன அழுத்தமின்றி இரவு நேரத்தில் நன்றாக தூங்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
9. இனிப்பு வகைகள் சாப்பிட்ட உடனேயே சர்க்கரை அளவை பார்க்க கூடாது என அவர் கூறியுள்ளார்.
10.மேலும், அடுத்த வேளை உணவுகளை சீராக வடிவமைக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“