சுகர் அதிகம் இருக்கா? இந்த உணவுகளை மட்டும் தொடாதீங்க: விளக்கும் டாக்டர் கார்த்திகேயன்
சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் எந்த விதமான உணவுகளை சாப்பிடக் கூடாது என்று மருத்துவர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். அதனை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் எந்த விதமான உணவுகளை சாப்பிடக் கூடாது என்று மருத்துவர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். அதனை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
சர்க்கரை நோய் பாதிப்பு இந்தியர்களிடம் அதிகரித்துள்ளதாக பலரும் கூறுகின்றனர். குறிப்பாக, தற்போது இளம் பருவத்தினரிடம் கூட சர்க்கரை நோய் இருக்கிறது. உணவு முறை மாற்றம் மற்றும் வாழ்க்கை குறை மாற்றம் காரணமாக இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.
Advertisment
அந்த வகையில், சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் எந்த விதமான உணவுகளை சாப்பிடக் கூடாது என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதனை பின்பற்றுவதன் மூலம் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு உணவிலும் குறிப்பிட்ட அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் இருக்கும். இது 55 அளவிற்கு குறைவாக இருந்தால், அந்த பொருட்களை சரியான விகிதத்தில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இது 55-ஐ தாண்டி இருந்தால் அத்தகைய உணவுகளை தவிர்த்து விட வேண்டும் என்று மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்துகிறார்.
அந்த வகையில் வீட்டில் பயன்படுத்தக் கூடிய வெள்ளை சர்க்கரையை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார். இது தவிர வெள்ளை அரிசி, மைதா, உருளைக் கிழங்கு, பூசணி, வாழை, சோடா, தேன் மற்றும் துரித உணவுகள் போன்றவற்றை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக் கூடாது என்று மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார்.
Advertisment
Advertisements
இந்த அனைத்து உணவு பொருட்களிலும் கிளைசெமிக் இண்டெக்ஸின் அளவு சராசரியாக 75 முதல் 90 வரை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இவை நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை மிக வேகமாக உயர்த்தும் என்றும் அவர் எச்சரிக்கை விடுக்கிறார்.
ஆனால், கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவு குறைவாக இருக்கும் உணவுகளை சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம். அதன்படி, பருப்பு வகைகள், சுண்டல், பீன்ஸ், கோதுமை, பால், தயிர், வெண்ணெய் மற்றும் தேங்காய் போன்ற உணவு பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.
மேலும், பீட்ரூட், வெள்ளரி, வெங்காயம், தக்காளி, கீரை, மஷ்ரூம் போன்ற பொருட்களையும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். பழங்களை பொறுத்த வரை திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - Doctor Karthikeyan Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.