சைனஸ் சளி தொந்தரவு? தண்ணீரில் உப்பு சேர்த்து இப்படி மூக்கு கழுவுங்க: டாக்டர் கார்த்திகேயன்
சைனஸ் பாதிப்பு இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். இவற்றை தொடர்ச்சியாக பின்பற்றும் போது சைனஸ் பிரச்சனை குணமடையத் தொடங்கும் என்று அவர் கூறுகிறார்.
சைனஸ் பாதிப்பு இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். இவற்றை தொடர்ச்சியாக பின்பற்றும் போது சைனஸ் பிரச்சனை குணமடையத் தொடங்கும் என்று அவர் கூறுகிறார்.
இன்றைய சூழலில் பலருக்கும் சைனஸ் பிரச்சனை இருக்கிறது. இது ஏற்படுவதற்கான காரணம் மற்றும் இதனை குணப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Advertisment
நம் முகத்தில் கன்னங்கள் இருக்கும் பகுதியில் எலும்புகளுக்கு உள்ளே காற்றுப் பை இருக்கிறது. இதேபோல், புருவங்கள் இருக்கும் இடத்திலும் எலும்புகளுக்கு உள்ளே காற்றுப் பை இருக்கிறது. இவற்றை மக்ஸிலரி சைனஸ் மற்றும் ஃப்ராண்டல் சைனஸ் என்று கூறுவார்கள் என மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நமக்கு சளி பிடித்திருக்கும் போது அவை மூக்கு வழியாக சென்று இந்தக் காற்றுப் பைகளில் அடைத்து சைனஸ் பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகிறது. இந்தப் பிரச்சனையின் போது சைனஸ் இருக்கும் இடங்களை தொட்டாலே நமக்கு வலி எடுக்கும். குறிப்பாக, தலைவலி மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும் என்று மருத்துவர் கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சனை இருக்கும் போது சுடுதண்ணீரில் ஆவி பிடிக்கலாம். ஆனால், ஆழ்ந்து மூச்சை இழுக்கக் கூடாது என்று மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்துகிறார். மேலும், காலை மற்றும் மாலை நேரத்தில் சுடுதண்ணீரில் குளிக்கலாம். இது தவிர மற்றுமொரு பயிற்சியையும் மேற்கொள்ளலாம்.
Advertisment
Advertisements
அதன்படி, அரை லிட்டர் தண்ணீரில் 15 கிராம் உப்பு, இரண்டரை கிராம் பேக்கிங் சோடா ஆகியவற்றை கலந்து கொள்ள வேண்டும். பின்னர், இந்த தண்ணீரை வைத்து மூக்கை அடிக்கடி கழுவ வேண்டும் என்று மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்துகிறார். இப்படி செய்யும் போது சளி வெளியேறும் என்று அவர் கூறுகிறார்.
மேலும், சைனஸ் பிரச்சனை இருக்கும் போது வாசனை திரவியங்கள் பயன்படுத்தக் கூடாது. அதிகமாக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடக் கூடாது. இது போன்ற நேரத்தில் பூண்டு, இஞ்சி மற்றும் மஞ்சள் ஆகியவை மருந்து போன்று செயல்படும். குறிப்பாக, ஆரஞ்சு, எலுமிச்சை, பப்பாளி மற்றும் ஆப்பிள் பழங்களை சாப்பிடலாம்.
இதேபோல், அனைத்து வகையான கீரைகள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம். இந்த பழக்க வழக்கங்களை தொடர்ச்சியாக பின்பற்றும் போது சைனஸ் பிரச்சனை குணமடையத் தொடங்கும் என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நன்றி - Doctor Karthikeyan Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.