ஒரு லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து... இந்த பிரச்சனைக்கு 5 நிமிடத்தில் உங்க வீட்டுலேயே தீர்வு: டாக்டர் மனோஜ்
சைனஸ் பிரச்சனைக்கு வீட்டில் இருந்தபடியே தீர்வு காண்பது எப்படி என மருத்துவர் மனோஜ் தெரிவித்துள்ளார். இதனை பின்பற்றுவதன் மூலம் சைனஸ் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் எனக் கூறப்படுகிறது.
சைனஸ் பிரச்சனைக்கு வீட்டில் இருந்தபடியே எளிமையாக தீர்வு காண முடியும் என மருத்துவர் மனோஜ் கூறியுள்ளார். அதன்படி, ஆவி பிடித்து இந்த பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
குறிப்பாக, சளி பிடித்து தலை பாரமாக இருந்தால் கட்டாயமாக ஆவி பிடிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில் ஆவி பிடிக்கும் போது அந்த புகையை எவ்வாறு உள்ளே இழுத்து, பின்னர் வெளியிடுகிறோம் என்பது முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார்.
மூக்கை சுற்றி இருக்கும் சளி கரைந்து வெளியேற வேண்டும் என்பதற்காக தான் ஆவி பிடிக்கிறோம் என மருத்துவர் மனோஜ் கூறுகிறார். எனவே, ஆவியை வாய் வழியாக பிடித்து வெளியேற்றுவதில் பயன் இல்லை. காரணம் வாயில் இழுக்கும் புகை நுரையீரலுக்கு மட்டும் செல்லும் என்றும், இதனால் சைனஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக, சுமார் ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இது நன்றாக கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விட்டு, அதில் நாம் பயன்படுத்தும் மருந்தை தேவையான அளவு சேர்க்க வேண்டும். அதன் பின்னர், ஆவி பிடிக்கும் போது அந்த புகையை மூக்கால் சுவாசித்து, வாய் வழியாக வெளியேற்ற வேண்டும் என மருத்துவர் மனோஜ் அறிவுறுத்துகிறார்.
Advertisment
Advertisement
இவ்வாறு 5 நிமிடங்களுக்கு பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இவ்வாறு ஆவி பிடித்தால் சைனஸ் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று மருத்துவர் மனோஜ் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.